வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, July 26, 2017

Tuesday, July 25, 2017

வேலைநிறுத்த
ஆதரவு ஆர்ப்பாட்டம்..
நமது கூட்டணி சங்கங்களின் கூட்ட அறைகூவல் படி
BSNLEU, SNEA உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்கள் விடுத்த ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக
26.7.2017 அன்று  ஆர்ப்பாட்டம்...
27.7.2017 கருப்பு பேட்ஜ் அணிந்து
 தார்மீக ஆதரவு....
கிளைகள் தோறும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்திடுவோம்.
குடந்தை GM(O) மற்றும் SDOP கிளைகள் இணைந்து
26.7.2017 மாலை 5.00 மணிக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்.
அனைவரும் பங்கேற்போம்...
தோழமையுடன் ...
NFTE-TEPU-SEWA-PEWA
மாவட்ட சங்கங்கள்-குடந்தை


Saturday, July 22, 2017

திட்டமிடுவோம் ...திரள்வோம் ...


திட்டமிடுவோம் ...திரள்வோம் ...
அடுத்தகட்ட நகர்வை நோக்கி ...பயணப்படுவோம் ...
தனிக்கடை  சப்தங்கள் ...புறந்தள்ளி ...
சங்கநாதம் முழங்கி ...
உரிமைக்குரல் உயர்த்தி ...
சென்னையில் ...சங்கமிப்போம் ...

Thursday, July 20, 2017

Image result for sports image
BSNL Sports and Cultural Board meeting was held on 14.07.2017 at BSNL CO,New Delhi. In absence of CMD BSNL, Director (HR) presided over the meeting. Decisions of the meeting are as under:-
1) Recruitments under sports quota (ratio of men and women 60: 40) will be put on fast track.
2) Recruitment will be done for National meets. Promotion and increment pending will be processed on fast track.
3) All India event total 8.
4) In AIBSNL tournament, rates of breakfast and lunch revised to 75 and Rs.125.
5) Kit money enhanced to AIBSNL meet Rs.3,000/- and for PSU Rs.4,000/.
6) Honorarium for circle treasurer increased to Rs.4,000/-.
7) Corporate sports fund increased to 2.5 Crs.
8) Refreshment allowance increased to Rs.300/-. 

Thursday, July 13, 2017

இப்படியும் ...சுத்தப்படுத்தலாமா ???

தூய்மை இந்தியா ...பணி 
நமது மாவட்டத்திலும் ...அனைத்து தொலைபேசி நிலையத்திலும் ...
தாமே  குப்பையை கொட்டி ...அந்த குப்பையை அப்புறபடுத்தல் இல்லாது ...
மண்டி கிடந்த செடி கொடிகள் ...புதர்கள் அப்புறப்படுத்தல்   என ...
மாவட்டம் முழுவதும் தூய்மை இந்தியா செவ்வனே நிறைவேறியது ...

ஆனால் ...நாகை தொலைபேசி நிலையத்தில் ...
தூய்மைபடுத்துவோம் ...என்பதை ..துடைத்தெடு ...
என ...தெளிவாக புரிந்துகொண்டு ...
அங்கிருந்த ...டேபிள் ...சேர் ...பீரோ ...
SCRAPPING  குவியலை ...
வீட்டுக்கு எடுத்து சென்று தூய்மைப்படுத்தியுள்ளனர் ...
ஏலம் என எந்த அறிவிப்பும் இல்லை ...
சுற்றறிக்கை  இல்லை ...
நமக்கு நாமே என ...சிலரே  பங்கு பிரித்து தூய்மைப்படுத்தி உள்ளனர் ..

நமது நாகை கிளைசெயலர் ...எதிர்த்து குரல் எழுப்பியதும் ...
JTO வீட்டுக்கு சென்றிருந்த சீர்வரிசை பீரோ ...
மீண்டும் தொலைபேசி நிலையம் வந்து சேர்ந்தது ...

BSNL சொத்தை ...அதன் பாதுகாவலர்களே ...
கழுத்தை அறுத்து ...வழிபறி செய்வது ...
வக்கிரத்தின் ...உச்சம் ...

நீதி ..கேட்டும் ...
கொள்ளை தொடராது இருக்கவும் ...
நாகையில் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் ...
திரள்வோம் ...BSNL  காக்க !

2 ம் நாள் மாங்கனி ...சிம் மேளா


இரண்டாம் நாளில் மயிலாடுதுறை தோழர்கள் ...
தன்னார்வலர்களாக ...வருகை தந்து பங்கேற்றனர் ...
இரவு மின்வசதி இல்லாதபொழுதும் ...
விளக்கேந்தி தொடர்ந்தது மேளா ..
சாதனை சிம் மேளா சிறக்க ...
பணியாற்றிய ...துணைநின்ற அனைவருக்கும் நன்றி ....

Tuesday, July 11, 2017

காரைக்கால் சிம் (கும்ப ) மேளா

காரை மாங்கனி திருவிழாவில் ...NFTE சார்பில் சிம் மேளா நடைபெற்றது ..
இரண்டாம் ஆண்டாக நடைபெற்றது ...
மேளாவிற்கு ஒரு வாரம் முன்பே ...
பதாகை ...சுற்றறிக்கை ...தொலைக்காட்சி ..
விளம்பரம் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதால் ...
9 மணி முதலே ..."காலா" திரைப்பட பரபரப்பில் ...சூழ்ந்த கூட்டம் ...
காரைக்கால் NFTE கிளை சங்கம் சார்பில் ...
BSNL  திட்டங்கள் பொறித்த விசிறி  தயார்செய்யப்பட்டிருந்தது ...
பொதுமேலாளர் மண்ணின் மரபோடு வரவேற்கப்பட்டார் ...
சட்டப்பேரவை உறுப்பினர் திருமிகு .அசானா வருகை தந்தார் ...
விசிறியை சட்டப்பேரவை உறுப்பினருக்கு PGM வழங்கினார் ...
சட்டப்பேரவை உறுப்பினர் ...
PGM  மிடம் மக்களின் கோரிக்கை மனுவை ..வழங்கினார் ...
சென்ற மாங்கனி மேளாவில் ...சிறப்பாய் பணியாற்றிய ...
தோழர் ரத்தினவேல்  JE ஐ ..வாழ்த்த வேண்டும் எனும் 
நம் கோரிக்கையேற்று ...கூட்டத்தில் நடந்தே வந்து ...
தோழர்களை உற்சாகப்படுத்தினார் ...PGM ...
மேளாவில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ...வலிகள் தந்தாலும் ...
தடங்கல்கள் அனுபவமாக எடுத்துக்கொண்டு ...
வருங்காலம் இந்த தவறுகள் தடுக்கப்படும் ... 
 என சமரச செய்துகொண்டோம் ...நிஜமாகட்டும் !
முதல் நாள் ...ஜூலை 8 .மேளாவில் ...
400 சிம் விற்பனை ... 4 LAND LINE இணைப்பு ... பதிவானது ...
400 சிம்மும் அன்றே ACTIVATE செய்யப்பட்டது ...
தொழில்நுட்ப கோளாறு தவிர்த்திருந்தால் ...
400 ...650 ஆகி இருக்கும் ...
குடந்தை மாவட்டத்தில் இரண்டு கோடி நஷ்டம் 
குறிப்பெடுத்து மட்டும் வைத்துகொள்ளாது ...
 NFTE  வினை புரிய வேண்டும் ... எனும் எண்ணமே ...
மேளாக்களின் பின்புலம் ...
மொத்தத்தில் இரண்டு நாள் மேளாவில் ...
900 ... தொள்ளாயிரம் ..
சிம் விற்பனை செய்யப்பட்டது ...
வினை புரிந்த ...செயலாற்றிய ...கரம்கோர்த்த ...
அதிகாரிகள் ...ஊழியர்கள் ...ஒப்பந்த ஊழியர்கள் ...
அனைவருக்கும் நன்றி ..நன்றி ...
தோழமையுடன் ....M .விஜய் 

(இரண்டாம் ...நாள் அறிக்கை தொடரும் )

Friday, July 7, 2017

Thursday, July 6, 2017


சென்ற ஆண்டு மாங்கனி திருவிழாவில் ...
மாம்பழங்களில் BSNL ஸ்டிக்கர் ஒட்டி ...
பக்தர்களுக்கு மாம்பழம் ...வழங்கபட்டது ...

இந்த ஆண்டு ...BSNL  திட்டங்கள் பொறித்த ...
விசிறிகள் ....

ஆண்டுக்கு ...ஆண்டு ...சிரமேற்கொண்டு ...
ஆண்டுக்கு ...ஆண்டு ...மெருகேறும் செயல்பாட்டோடு ...
நிதி செலவீனம் குறித்து கவலைப்படாது ...
செயல்புரியும் காரைக்கால் கிளை சங்கத்தை ...
வாழ்த்துவோம் ...பாராட்டுவோம் ...

BSNL உயர்ந்திட ...நிர்வாகத்திடம் ...
கடிதம் மற்றும் ஆலோசனை மட்டும் வழங்கிடாது ...
களத்தில் ...பணியாற்றும் ...
செயலில் ...முன்கையெடுக்கும் ...
NFTE ன் பணி ...என்றும் தொடரும் ...

இது போன்ற ... நிகழ்வுகள் செய்திட ...
BSNL நிலை விளக்கி ..உற்சாகப்படுத்தும் ..
நமது பொது மேலாளர் 
திரு .C .V .வினோத் PGM  அவர்களின்
ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது !

Wednesday, July 5, 2017


தாமதமான இன்சென்டிவ்வும் ...தீர்க்கமான உறுதிமொழியும் ..


புதிய LANDLINE  மற்றும் BROADBAND இணைப்பு ...
தேடி கொண்டுவருவோர்க்கான ...இன்சென்டிவ்வை ...
தாமதபடுத்தும் போக்கை கண்டித்து ...

இன்சென்டிவ் இன்னும் ஒரு வருடத்திற்கு ...
வழங்கப்படவில்லை என்றாலும் ...
இன்சென்டிவ் கோப்பில் குதர்க்கமான கேள்விகளால் ...
மேலும்இரண்டு வருடம் இன்சென்டிவ் தாமதமானாலும் ...
அடுத்த மகாமகத்தின் பொழுது இன்சென்டிவ் வழங்கினாலும் ...

எங்களுக்கு வாழ்வளித்த BSNL ஐ காப்போம் ...
தெரு ...தெருவாய் ...
வீடு ...வீடாய் ...அலைந்து ...திரிந்து ...
புதிய இணைப்பு தேடும் பணியை ...
எவ்வித சுணக்கமும் இன்றி தொடர்வேன் ...
இது  நிச்சயம் ... நிச்சயம்  ...
என 
முதல் நாள் உண்ணாவிரதத்தில் ...
தோழர் ...தோழியர்களால் ...
உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது ...

Tuesday, July 4, 2017

2 ம் நாள் பட்டினி போராட்டத்தில் ...தோழமையாளர்கள் ...


இரண்டாம் ...நாள் பட்டினி போராட்டத்தில் ...
BSNLEU மாவட்ட தலைவர் தோழர் .ராஜராஜன் ...
SNEA மாவட்ட செயலர் தோழர் .சீனிவாசன் ...
BSNLEU மாவட்ட செயலர் தோழர் .குருசாமி ...
வாழ்த்துரை ...தந்தனர் !