செயற்குழு
13.03.2011 மயிலாடுதுறை


தேர்தலுக்கு பிந்தைய மாவட்ட செயற்குழு சூழ்ச்சி,சதி,ஏமாற்று வாக்குறுதிகளுக்கிடையிலும் 450 வாக்குகளை தக்க வைத்த வெற்றி உவகையோடு தொடங்கியது. 4 முறை வெற்றி வாய்ப்பை இழந்த ஓர் சங்கத்தின் செயற்குழுவா ....? என வியக்கும் உற்சாகம், கோபம்,வீரம், வரலாறு, கடமைகள் என பன்முகவார்புகளோடு இறுதி வரை உற்சாகம் தாண்டவமாடிய மாவட்ட செயற்குழு.
ஜெகனை சுவாசித்த கூட்டம், உணர்ச்சி வசப்பட்டு,பழைய நினைவுகள் கருப்பு வெள்ளையில் கண்முன்னால் ஓடவைத்தது. "குப்தாவை தரிசிக்க வாய்பளித்த மாவட்டம்." , "ஜெகன் சிலை வைக்க புண்ணியம் செய்த மாவட்டம் ." என கண்ணீர் பெருக்கோடு தோழர்களின் குரல். மாவட்ட மாநாட்டை மின்ன செய்தது
NFTE-க்கு வாக்களித்தவர்களை காத்திடவேண்டிய கட்டாயம் என உணர்த்திய உரைவீச்சு.
தோற்றவர்களின் கூட்டமும், மேடையும் "வசைபாடும்" என்ற நிலையை தகர்த்து பொறுப்பை உரைகல்லாய் சரிபார்த்த மாவட்ட செயற்குழு. இயக்கபணிக்கும் - தேர்தலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதது என உணர்த்தி வருங்கால செயல்பாட்டை " வா வா " எதற்கும் தயார் என சூளுரைத்த மாவட்ட செயற்குழு . தோழர் ஆர். ஜெயபால் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

இட்ட பணி - நிறைவே முடித்த மயிலாடுதுறை தோழர் தோழியர்க்கு நன்றி !


குடந்தை மாவட்ட சங்கம்