மார்ச் - 23 - பகத்சிங் நினைவு நாள்

இந்திய வரலாற்றில் முதல் முறையாகவும், கடைசி முறையாகவும் இரவு நேரத்திலே தூக்கிலிடப் பட்டவர்கள் பகத்சிங் - சுகதேவ் - rajaguru

1929 - ஆம் ஆண்டு வரை பகவத்சிங்கம் (பகத்சிங் - தமிழ்பதம்) என்றால் யார் என்றே தெரியாது. 1931 முதல் பகவத்சிங்கம் என்றால் தெரியாதவரே கிடையாது.

பகவத்சிங்கம் தூக்கிலடப்பட்ட பிறகு நாடு முழுவதும் நாடக தொடக்கத்தில் - முடிவில் "பகவத்சிங்கம் எங்கள் பக்திமான்களின் தங்கம்" என்ற பாடல் மேடையில் தவறாது பாடப்பட்டது.

தமிழகத்தில் எஸ்.வி. சகஸ்ரநாமம் "தேசபக்தி" என்ற பெயரில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் - பெயரை, கதையை மாற்றி நாடகம் நடத்தினார். அதில் பகத்சிங் தூக்கு எழுச்சி மிகு வசனம் எழுதியவர் தோழர்.ப.ஜீவானந்தம்.

பகத்சிங்கத்தை தமிழகதிற்கு முதலில் அறிமுகபடுதியவர் தந்தை பெரியார் தான். பகத்சிங் மறைவிற்கு தன்னுடைய இதழிலே தலையங்கம் எழுதினார். தூக்குலிடப்பட்ட 6 மாதத்தில் 11 புத்தகங்கள் அவரை பற்றி வெளியானது. உடன் தடையும் செய்யப்பட்டது.

1931 -இல் தீப்பெட்டிகளில் கூட பகத்சிங் படம் பதித்து விற்பனை செயப்பட்டது. 1932 - இல் ஆங்கிலேய அரசு அதற்க்கு தடைவிதித்தது.