ஏப்ரல் - 29

பாரதிதாசன் பிறந்த தினம்ஆடுகிறாய் உலகப்பாயோசித்துப் பார்!

ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா

தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்

செகத்தப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்பராகிவிட்டால், ஓர் நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!

- பாரதிதாசன்