நிதி வீண் நீதியா.......?

GM அலுவலக CSC வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் கேட்க்கும் கேள்வி இதுதான்.... இவ்வளவு காசு கொடுத்து வாங்கின டிவி ஏன் ஓடாது ரிப்பேராக உள்ளது....? என்பது தான். வாடிக்கையாளர் சேவை மையம் என்பது BSNL - இன் வரவேற்ப்பறை போல, அங்கே கிடக்கும் அவலத்திற்கு யார் பொறுப்பு...? கைப்பிடி ஆடும் சேரில் உட்கார்ந்து வேலை செய்யும் தொழிலாளியை விடுங்கள்..... வருடக்கணக்கில் ஓடாது முடங்கி கிடக்கும் TV-யை இயங்க வைப்பது யார் வேலை...?


நேசம் புதிய திட்டம், செல் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. வாடிக்கையாளர்கள் ஆர்வமாய் CSC ஓடி வந்து விசாரிக்கிறார்கள். அதன் கட்டண விபர பட்டியல் கேட்க்கிறார்கள், அதற்க்கு நாம் பல்லை காட்ட வேண்டி உள்ளது. நோட்டீஸ் இன்னமும் பிரிண்ட் செய்யப்படவில்லையாம் .!!?? BSNL BRAND promotion வாழ்க !



வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு "சுயவரம் " நடத்துவது போல் இன்னார் தான் தனக்கு வேண்டும்..? வேண்டாம் என்பது தான் CSC incharge பணியா ?



வேடிக்கையாளர் மையமாக மாறாது இருக்க நிர்வாகம் கவனிக்குமா??



GM அலுவலக அனெக்ஸ் பகுதியில் ஓர் மேடை லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேடை ஏன் எதற்கு என்றே தெரியவில்லை...? கட்ட சொன்னவர்கள் "ஆனந்தமாய்" சென்று விட்டார்கள்.



BSNL - நிதி வீண் நீதியா...?