FNTO- வின் ஆத்திரத்தில் அள்ளித்தெரித்த அறிக்கைக்கு ,
நமது கேள்விகளும், விளக்கங்களும் !

1. BSNL நிர்வாகம் " நிதி சிக்கன நடவடிக்கை " என்று சொன்னால் தோழர் முத்துராசு TTA- வின் அரியர்ஸ் மட்டும் PAYMENT செய்யாதே என அர்த்தமா ..... ?
2. தோழர் முத்துராசு TTA- வின் அரியர்ஸை பல மாதங்களாக PAYMENT செய்திடாது , குடந்தை NFTE இணையத்தளம் சுட்டி காட்டிய பின்னர்தான் ( 02.04.2011 ) சனியன்று அந்த தோழரின் அரியர்ஸ் அவசர அவசரமாய் BILL REGISTER-ல் PAYMENT க்காக தங்கள் சிம்மாசனதிலிருந்து AO அறைக்கு சென்றது ..? சனிக்கிழமை 02.04.2011 அன்று பில்கேட்ஸ்ஸா வந்து இதையெல்லாம் செய்தார். ...?
3. புதைத்து வைத்ததை நம்கையாலே தோண்டி எடுத்து PAYMENT செய்ய வைத்துவிட்டனரே என்ற கோபம்தானே தத்து பித்து அறிக்கை ....?
4. 25 தேதிக்கு பின்னர் வந்த PAY FIXATION MEMO விற்கு அரியர்ஸ் போட்டபின்னர் சம்பளத்தில் சேர்க்கவில்லையென்று சம்பளம் முடித்த பின்னர் 1 தேதி தான் SUPLIMENTARY BILL போட முடியம் என்று தெரியுமா தெரியாதா உங்களுக்கு .
5. பீற்றிக்கொள்ளும் சங்கம் NFTE என்கிறீரே ....? பீற்றீக்கொள்ளும் NFTE - லிருந்து FNTO - வில் இணைந்தீர். பிறகு FNTO விலிருந்து NFTE - க்கும் ஓடிவந்தீர் மீண்டும் FNTO வுக்கு ஓடிப்போய் FNTO கூடாரத்தை காலி செய்தவர் யார் ... ? மிஸ்டர் - 32 ....?
6. பீற்றீக்கொள்ளுதல் என்றால் என்ன சிறு குறிப்பு வரைக.
கடலூர் FNTO மாநிலசெயற்குழுவில் " குடந்தையில் FNTO - வில் தற்பொழுது என் வசம் 250 பேர் NFTE-லிருந்து விலகி FNTO-வுக்கு விண்ணப்பம் தந்துள்ளனர் மேலும் 50 பேர் வரவுள்ளார்கள் " என முழங்கிவிட்டு தேர்தல் முடிவில் பார்த்தால் வெறும் 32 வாக்கு மட்டும் பெற்றீரே " இதற்க்கு பெயர்தான் பீற்றீக்கொள்வது.
7. இதனால் தெரிவித்துக்கொள்வது யாதெனில் .... உங்கள் சங்க உறுப்பினர் எண்ணிக்கையை சிங்கிள் ஆக்கிட சிங்கிளாய் கண்துஞ்சாது பாடுபடும் உங்கள் போக்கினை மாற்றுவது எங்கள் வேலையல்ல நீங்கள் இதுநாள் வரை காட்டிய பாரபட்சம், இரட்டைவேடம் இதற்க்கு கிடைத்த பலன் தான் 32 வாக்கு. எடுப்பார் கைபிள்ளையாய் மாறி தொழிற்சங்க மரியாதை புதைக்காதீர் தோழா ... !
பிரச்சனைகள் மீது மட்டும் விமர்சனம் செய்யவும் தவறிருந்தால் திருத்திக்கொள்கிறோம் - இயக்கத்தை விமர்சித்தால் .............?

GM(o) கிளைச்சங்கம்