மரத்தின் அடி வேர்களில் "திராவகம்" ஊற்றும் நிர்வாகத்துணைவன் BSNLEU -வின் முகம் பாரீர்!


BSNL CONDUCT RULES - இருந்தபொழுது 2006-ஆம் வருடம் BSNL நிர்வாகம் நம்ம BSNL-இன் வருத்தப்படா வாலிபர் சங்கத் தலைவராக, தோழர் நம்பூதிரி இருந்தபொழுது, BSNL நிர்வாகம் BSNLEU-இன் "கைப்புள்ள" நம்பூதிரியை கலந்து ஆலோசிக்காது நடத்தை விதிகளை அமல்படுத்தியது. வழக்கம் போல் நம்பூதிரி கர்ஜித்தார்...... கர்ஜித்தாஆஆர்.

தற்பொழுது அதன் தாக்கம், கொடூரம் தெரிய ஆரம்பித்துள்ளது. BSNL நிர்வாகம் தற்பொழுது எடுத்திருக்கும் முடிவுகள்.

1. BSNL CONDUCT-2006 விதிகள் படி 55-வயது பூர்த்தி செய்தவர்களை மருத்துவ பரிசோதனை செய்வது, அதில் தகுதியற்றவர்களை உடனே பணியிலிருந்து வெளியேற்றுவது.


2. 55-வயதை பூர்த்தி செய்த ஊழியர் CR-இல் இரண்டு AVERAGE பெற்றிருந்தால் நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றுவது.


3. 55-வயது முடித்தோர் தானாக ஓய்வு பெற விரும்பினால் மீதமுள்ள 5 வருடத்திற்கு 5 INCREMENT கொடுத்து வழக்கமான பென்ஷன் கொடுத்து அனுப்புவது.


இதெல்லாம் 20.04.2011 அன்று நிர்வாகம் NFTE-உடன் பேச்சு வார்த்தையின் பொழுது சொன்னது. நமது சங்கம் இதை வன்மையாக கண்டித்துள்ளது. நிராகரித்துள்ளது.


ஆனால் அங்கீகார சங்கம் இதைப்பற்றி ஏதும் பேசாது மௌனம் காப்பது ஏன்?


அதிகாரிகளுக்கும், ஊழியர்க்கும் பாதிப்பென்றால் JAC-இல் ஒளிந்து கொள்ளலாம்...? ஆனால் இதில் ஊழியர்க்கு மட்டும் தானே பாதிப்பு!! தனியாய் போராடவேண்டும் ஆழ்ந்த உறக்கமா.......! தோழா....!