தோழர் ஜெகன் திருவுருவச்சிலை தோழர்களின் பசுமை நினைவு சாரலோடு GM அலுவலகத்திலிரிந்து சென்னை வழியனுப்பப்பட்டது. தோழர். பட்டுசாமி தலைமையேற்க, பாலமுருகன் வரவேற்ப்புரையாற்ற ஜெகனிடம் மயங்கிய மூத்த தோழர்கள் குடந்தை மாலி, தனபால், பாலு, இசக்கிமுத்து, வரதராஜன், ஜெயபால் பங்கேற்று நிறைவுரையற்றினர். ஜெகன் சிலை சிற்பி மற்றும் அவரது உதவியாளர்களுக்கு நன்றி பாராட்டி நினவு பரிசும் வழங்கப்பட்டது. SDOP தோழர். சௌந்தரராஜன் சிற்ப சாலையிலிருந்து GM அலுவலகம் வரையில் தொடர்ந்து புகைப்படம் எடுத்து உதவினார். மேலும் பெருமளவில் தோழர்கள் குலதெய்வ கோவில் முன் நின்று புகைப்படம் எடுப்பதுபோல் தோழர் ஜெகன் சிலை முன்பு நன்றி பெருக்கோடு புகைப்படம் எடுத்துக் கொண்டது நெகிழ்ச்சி தந்தது. விண்ணதிரும் முழக்கத்தோடு "ஜெகன் இல்லம்" பெருமைப்பட திருவுருவச் சிலை வழியனுப்பட்டது.


தொலைபேசி இயக்க சகாப்தம்


பழமையில் கங்கையாய்


புதுமையில்


நம் நினைவில் வாழும் ஜெகன் புகழ் பாடுவோம்.தோழமையுடன்மாவட்ட சங்கம்