கொத்து குண்டுகளிட்டு, கொத்து கொத்தாய் மாண்டு போன நம் தமிழின தொப்புள்கொடி உறவுகளை கொன்று குவித்த இனப் படுகொலையாளன் ராஜபக்ஷேவை ஐநா சபை போர்க் குற்றவாளி என அறிவிக்கக்கோரி இந்திய அரசு, ஐநா சபையை வலியுறுத்த வேண்டும் என்றும், இந்தியாவும் இதர நாடுகளும் சேர்ந்து, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உலகம் முழுவதும் வாழும் தமிழின நம் தொப்புள் கோடி உறவுகளின் காயத்திற்கு மருந்திடுவது போல் அமைந்துள்ளது.