வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Monday, June 20, 2011


பொறுப்பான தொழிற்சங்கப் பணி என்ன....?
BSNLEU - தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது.....?


மேற்கண்ட கேள்வியினை அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம்.


தமிழகத்தில் 400 - க்கும் மேற்பட்ட தோழர்கள் AVERAGE என NEPP பதவியுயர்வு தொட முடியா நிலை நிலவுகிறது. தற்பொழுது அதற்கு தீர்வு கண்டுள்ளதாம் அங்கீகரிக்கப்பட்டதொழிற்சங்கமான BSNLEU. AVERAGE என வஞ்சம் சுமந்த அவர்கள் அனைவரும் நிர்வாகத்திடம் கருணை மனு அளித்தால் AVERAGE-லிருந்து ஏதேனும் விலக்கு பெறலாம் என்பதே அந்த மாபெரும் தீர்வு. பதவி உயர்வில் தொழிலாளியை மண்டியிட செய்தது மட்டுமின்றி நிர்வாகத்தின் காலணியை மண்டியிட்டவாறே நெற்றியால் துடைத்துவிடு என்பது போல் ஓர் தீர்வு. இதற்கு BSNLEU இணையதளம் NEPP-இல் மிகப்பெரிய வெற்றி, முன்னேற்றம் என கொக்கரிக்கிறது.


அதிகாரிகளுக்கு 01.01.2007 முதல் புதிய ஊதிய விகிதத்தில் (Medical Reimbursement) மருத்துவப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஊழியருக்கு மட்டும் பழைய ஊதிய விகித்தில் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதனை யார் களைவது.....!
யார் கேட்க வேண்டும்.....!
தொழிற்சங்கப்பணி என்றால் என்ன.....?
BSNLEU........................!!! ?