வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, June 10, 2011

அவதூறுகளும், வசவுகளும் அனுப்பியவர்

முகத்திற்கே திரும்பட்டும்....!
ஒப்பந்தத் தொழிலாளி போராடியபோது பதுங்கியவர்கள்....
ஒப்பந்தத் தொழிலாளிக்கு NFTE தியாகம் செய்த வரலாறு தெரியாத சிறியவர்கள் பொழிந்தனர் வசைமாரி!! பிழிந்தனர் வார்த்தை விஷம்!!EPF, ESI பணத்தில் 5 கோடி பணத்தில்
NFTE தேர்தலை சந்திக்கிறது என
மாற்றுசங்க மாமேதை சொன்னார்!


EPF, ESI பணம் வைத்து NFTE திருமணம் செய்தது,
கார், பஸ், ரயில், விமானம் NFTE வாங்கியுள்ளது என
தினமும் காதோடு ரகசியம் கிளப்பியவர் ஏராளம்.....!


நீதி கேட்டு நீண்ட நெடிய பொய் பயணம்
சென்றோர் பலர்.....!
NFTE - சோற்றை தின்று ரெண்டகம் செய்திட்ட
நன்றி மறந்த இருள் நெஞ்சங்கள் ஏராளம்....!


பினாமி! பினாமி!
NFTE என ஏலமிட்ட புருட்டஸ்கள், யூதாஸ்கள் ஏராளம்!


ஒப்பந்தத் தொழிலாளி காக்கிறேன் வாருங்கள்!
EPF பணம் மீட்டு தருகிறேன் என
மீசை முறுக்கி, நெஞ்சை நிமிர்த்தி, தொடை தட்டி
EPF அலுவலகம் கூட்டி சென்று
வாசலில் நின்று டீ, வடை ருசி பார்த்து
குடந்தை திரும்பி பிறகு குறட்டை விட்டவர் ஏராளம்.....!


பொய்யே - விஷமமே -
எங்கே உன் கொடுக்கு!
முகம் மூடிக் கொள்ளாதே
எங்கள் பாசமிகு தோழரே!!
தூற்றியவர் முகம் நோக்கி
திரும்ப வருகிறது எல்லாமே!
கரியும் சேர்த்துதான்!


செய்தி : 2007 முதல் 2010 வரை ஒப்பந்தத் தொழிலாளிக்கு கட்டிய EPF தனி நபர் ரசீது (INDIVIDUAL EPF SLIP) EPF அலுவலகத்திலிருந்து நம்மால் வாங்கப்பட்டுள்ளது.