புதையல் - வெளிவருமா....?

            "திருவனந்தபுர பத்மநாபசாமி புதையல்" - அறைகளில் உள்ளதென தெரிந்ததும் கதவுகள் திறக்கப்பட்டது. வெளியே எடுக்கப்பட்டது. இது சமீபத்திய சம்பவம். BSNL-லிலும் புதையல் உள்ளது. எடுப்பதற்கு தான் மனமில்லை..?


                 BSNL கார்ப்பரேட் அலுவலகம் சமீபத்தில் ஓர் உத்தரவு வெளியிட்டுள்ளது. (BSNL No. 16-4/2011-TRG dated 29.06.2011) BSNL-இல் பணிபுரியும் தொழில் நுட்ப வல்லுனர்கள், (BE/BS) வியாபார உக்திகள் சார்ந்த கல்வியறிவு உள்ளவர்கள், (MBA) BSNL துறை தொழில் நுட்பம் குறித்து வகுப்புகள் எடுத்திட, பேச்சுத்திறமை பெற்றோர்களை கொண்டு அந்த அந்த மாவட்டத்திலேயே வகுப்புகள் எடுத்திட, வியாபார திட்டமிடலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்பதே அந்த உத்தரவு. அதில் நமது CRDA மாவட்டத்தில் தோழர்.G.வைத்தியநாதன் TTA/திருப்பனந்தாள் மற்றும் திரு.T. அசோகன் SDE ஆகியோர் கார்ப்பரேட் அலுவலகத்தால் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்கள்.


                BSNL - க்கு தற்போதைய தேவை சக்திமிக்க தொழில்நுட்பம், சுட சுட தாங்கி வரும் சிந்தனையாளர் இளைஞர் பட்டாளம் தான். இவர்களை நமது மாவட்டம் தமிழ் மாநிலத்திற்கே முன்மாதிரியாய் முதலில் களமிறக்க வேண்டும் என்பதே நமது ஆவல்.


சிற்பியை அழைத்து வந்து
அம்மிக்கல் கொத்த சொல்வது
தான் BSNL - இன் பலவீனம்.
பலவீனம் அகற்ற வேண்டும்
என்பதே நம் ஆவல்.