ஊழியர் சேமநலநிதி (Welfare) Payment படும்பாடு ..!!

16.05.2011 தேதியிட்ட காசோலை - Technical / Non Technical / Scholarship வழங்கிட மாநில சேமநல நிதியிலிருந்து நமது மாவட்ட சேமநல நிதி வந்துவிட்டது. அந்த காசோலை வங்கியில் Collection க்கு அனுப்பப்பட்டு Collection ஆகவில்லை 1 மாதத்திற்கு மேலாக " அநாதை பிணமாய் " அந்த காசோலை வங்கி கேட்பாரற்று கிடந்துள்ளது. இது அறியாத நமது மாவட்ட Welfare Board பணம் பட்டுவாடா செய்திட அனுப்பப்பட்ட காசோலை " பணம் இல்லை " என திரும்ப அனுப்பப்பட்டது. ( BSNL இமேஜ் .... ! ! )

இதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிகொள்ளாது, கவலைபடாது அதற்கான TREASURER - " தேமே" என மேல உள்ளவர் மீது பழிபோட்டு அமர்ந்துள்ளனர். அனால் தங்கள் மேல் அதிகரியின் ( 01.07.2011) GPF
அவசரத்திற்கு " சும்மா அதிருதுல்ல " பாணியில் ஆளாளுக்கு ஆளாய் பறக்கிறார்கள்.

கல்வி கட்டணம் கட்ட உபயோகப்படுமே : என எதிர்பார்த்து தொழிலாளி காத்திருக்கிறான்.

இது நியாயமா ? தர்மமா ?

நெஞ்சம் சுடவில்லையா ?