கடைந்தெடுத்த பொய் பிரச்சாரம்! ஜாக்ரதை!


கடந்த ஆண்டு போனஸ் பறிக்கப்பட்டபொழுது
                மௌனியாய் அமைதிகாத்தார் நம்புத்ரி!
போனஸ் கொடுபடா ஊதியம் என்பதனை மறந்து
                 நஷ்டம் தோழரே என்ன செய்வது?
என உதடு பிதுக்கினார் நம்புத்ரி!!

               6-வது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் LTC பயண பண பலன் - BSNL நிர்வாகம் வழங்கியபோழுது, உற்சாகமானார் - திருவாய் மலர்ந்தார் "தோழரே! போனஸ்க்கு பதில் தான் இது என்றார்"?


               தற்பொழுது LTC - மருத்துவப்படி - நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் "ஐந்து நாள் பணி" வாங்கிவிட்டோம் பார்த்தீர்களா...? என பொய் பிரசாரம் ஆரம்பித்துள்ளனர்.


              "ஐந்து நாள் பணி" அமல்படுத்தலாம் என்ற முறையான உத்தரவு ஏதும் BSNL நிர்வாகத்தால் வெளிவரவில்லை. தற்பொழுது வெளிவந்திருப்பது பழைய உத்தரவுகளின் தொகுப்பே...!

- மாவட்ட சங்கம்