வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, October 19, 2011
இணையத்தில் ஒருவரின் புலம்பல் இது ....


பிறரிடம் விளம்பிட .....


ஏர்டெல்லின் கொள்ளை
ஒரு காலத்தில் ஏர்டெல்தான் இந்தியாவின் பிரபல மொபைல் சேவை நிறுவனம், ஏர்டெல்லின் சிறப்பே அதன் தரமும், அதன் வாடிக்கையாளர் சேவையும்தான், இதெல்லாம் இந்தியாவிலேயே அதிக பயனர்களை கொண்ட நிறுவனம் என்ற பெயரை பெறும் வரைதான், என்று அந்த பெயரை பெற்றதோ அன்றிலிருந்து நிலைமை தலைகீழ்..ஏர்டெல் கொள்ளையடிப்பது ஒன்றும் புதிதல்ல அதற்கு தற்போது மேலும் ஒரு புது டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது முன்பெல்லாம் 26 ரூபாய்க்கு குறுந்தகவல் பூஸ்டர் போட்டால், ஒரு மாத வேலிடிட்டியுடன் 6000 குறுந்தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் இப்போது டிராயின் புது விதிமுறையின்படி ஒரு நாளைக்கு 100 குறுந்தகவல்கள் மட்டுமே அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது..இதுவரை 26 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 200 குறுந்தகவல்களை தந்துகொண்டிருந்த ஏர்டெல் நிறுவனம், இப்போது அதே 26 ரூபாய்க்கு ஒருநாளைக்கு தருவது வெறும் 75 குறுந்தகவல்கள் மட்டுமே..நான் வாடிக்கையாளர் அதிகாரிக்கு தொடர்பு பேசினேன் அவரிடம் நீங்கள் முன்பு கொடுத்த அதே பணத்திற்கு இப்போது 100 குறுந்தகவல்களைத் தரலாமே என்று கேட்டதற்கு அது டிராயின் விதிமுறை என்றார்.நீங்கள் கட்டணத்தை உயர்த்தியதற்கும் டிராய்க்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்டேன், அவர்கள் தான் குறுந்தகவல் பூஸ்டர்களின் கட்டணங்களை உயர்த்துமாறு விதிமுறையில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார். நான் அப்படி ஒன்றும் குறிப்பிட்டதாக தெரியவில்லையே என்றேன், இல்லை உங்களுக்கு தெரியாது இது நிறுவனங்களுக்கான தனி அறிவுறுத்தல் என்கிறார்..எனக்கு கோபம் வந்துவிட்டது, எனக்கு உங்கள் பதில் திருப்தியளிக்கவில்லை, உங்கள் மேலதிகாரியிடம் பேசவேண்டும் இணைப்புக்கொடுங்கள் என்றேன், அவர் இணைப்பு கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு 10 நிமிடங்கள் வரை காத்திருந்தேன் அதற்கு கட்டணம் 3 நிமிடத்திற்கு 50 பைசா. பத்து நிமிடத்திற்கு பிறகு இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டது. நான் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தால் காத்திருக்க சொல்லிவிட்டு ஏர்டெல் டோன் ஓடுகிறதே தவிர எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் அதிகாரிக்கு இணைப்பு கொடுப்பதில்லை.நான் வேறு நிறுவனத்திற்கு மாற முடிவு செய்துவிட்டேன்.அவர்கள் இவ்வாறு கொள்ளையடிப்பது பெரிய விஷயமில்லை நம்மிடம் அதற்கான விளக்கத்தை கூறுவதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை.எனக்கு வேறு ஒரு சந்தேகம் இருக்கிறது.. நம் பணத்தை செலவு செய்து நாம் பூஸ்டர் போட்டோ போடாமலோ ஒருநாளைக்கு எத்தனை குறுந்தகவல் அனுப்பினால் இந்த டிராய்க்கு என்ன? நாம் 100 குறுந்தகவலுக்கு மேல் அனுப்பக்கூடாது என்று இவர்கள் ஏன் சொல்கிறார்கள்? இது எப்படி இருக்கிறது தெரியுமா? நம் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் அல்லது நமக்கு ஒரு ஹோட்டலில் கணக்கு இருந்தாலும், நாம் ஒரு நாளைக்கு 3 இட்லிதான் சாப்பிட வேண்டும் என்று சட்டம் போட்டதை போல உள்ளது.. இந்த விதிமுறைக்கான அடிப்படை காரணம் தெரிந்தால் யாராவது கூறுங்கள்...