இவர்கள் அப்பன் வீட்டுப் பணமா … சாராய பீப்பாய் விஜய் மால்யாவிற்கு அள்ளிக் கொடுக்க ?

மாலத்தீவு மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர்மன்மோகன் சிங் வீடு திரும்பும் முன்னரேபதறுகிறார். பறக்கும் விமானத்திலேயே பேட்டிகொடுக்கிறார்.”ஏதாவது செய்தாக வேண்டும்” !
விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பதறிஓடுகிறார். நிதி அமைச்சரை சந்தித்துச்சொல்கிறார்”ஏதாவது செய்தே ஆக வேண்டும்”.
நிதியமைச்சர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின்தலைவர்களிடையே பேசுகிறார்”ஏதாவது செய்யவேண்டும்”
இந்த “ஏதாவது செய்ய வேண்டும்” க்கு பின்னர்இருக்கும் அர்த்தம் என்ன ?சாராய பீப்பாய் -(லிக்கர் பேரல் -தமிழில் சரிதானே ?)விஜய் மால்யாவிற்கு கிங் பிஷர் விமான சர்வீசைதொடர்ந்து நடத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைபோக்க பண உதவி செய்ய வேண்டும்.
எவ்வளவு பணம் ?(மால்) ய்யா 7 ஆண்டுகளாக தொழில் நடத்திசேர்த்து வைத்திருக்கும் மொத்தக் கடன் 7000 கோடி ரூபாய்.மொத்த நஷ்டம் இது வரை சுமார் 4000 கோடி ரூபாய்.எண்ணை நிறுவனங்கள் அனைத்துக்கும்விமான எரிபொருள் வாங்கிய வகையில் கொடுக்க வேண்டிய பணத்தைத் -(பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி இந்துஸ்தான் பெட்ரோலியம்நிறுவனத்துக்கு 600 கோடி.இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 200 கோடி )
கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டே போனதாலும்,கொடுத்த காசோலைகள் திரும்பி விட்டதாலும்,மேற்கொண்டு எரிபொருள் கொடுக்க முடியாதுஎன்று மறுத்து விட்டன.எரிபொருள் வாங்க காசு இல்லாமல் தினமும் பலவிமான சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் கிங்பிஷர்விமான நிறுவனத்திற்கு குறைந்த வட்டியில் கடன் கொடுத்து இந்த சிக்கலில் இருந்து அதை மீட்க வேண்டும். அதற்குத் தான் இத்தனைமீட்பர்களும் பதறுகிறார்கள்.
(இப்போதைக்கு அதற்கு “கடன்” என்றுதான் பெயர். பிற்பாடு அது நஷ்டத்தில் “பங்கு” ஆகி விடும்.)ஏற்கெனவே இந்த வங்கிகள் நிறைய கடன்கொடுத்திருந்தன.கொடுத்த கடன் எதுவும்திரும்ப வரவில்லை. பின்னர் ரிசர்வ் வங்கியின்ஆலோசனைப்படி -13 வங்கிகளும் தங்கள் கடனை – பங்குகளாகமாற்றிக்கொண்டு விட்டன.கிங் பிஷரின்பங்கு விலை பங்கு மார்க்கெட்டில் 40 ரூபாயாகஇருந்தபோது, இவர்கள் 63 ரூபாய் கொடுத்து பங்கை வாங்கி கொண்டார்கள்.(சந்தேகமே வேண்டாம் -எல்லாம் நம் பணம் தான் !)இன்றைய தினத்தில் கிங் பிஷர் பங்கு அதல பாதாளத்திற்கு சரிந்து – ரூ.19.65-ல் நிற்கிறது.கிங் பிஷர் விஜய் மால்யாவின் முழு கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.கம்பெனி சரியக் காரணம் -நிர்வாகம் சரி இல்லாததே.
இந்த லட்சணத்தில் புதிதாக,மிகுந்த பொருட்செலவில்,சும்மா ‘பந்தா’ விற்காக,இரண்டு டபுள் டக்கர் விமானங்களுக்குவேறு ஆர்டர் கொடுத்திருக்கிறார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரியசாராய உற்பத்தித் தொழிற்சாலை -(விஸ்கி, பீர் தயாரிக்கும் யுனைடட்ப்ரூவரீஸ்), ரேஸ் கார்(போர்ஸ்-1),கிரிக்கெட் கிளப்(ராயல் சேலஞ்சர்ஸ்),அடிக்கடி சினிமா நடிகைகளுடன் பார்ட்டிகள் இந்த நிறுவனத்தில் விஜய் மால்யாவின் பங்கு58.61 %. வங்கிகள், நிதி -இன்சூரன்ஸ்நிறுவனங்கள், தனியார் எல்லாரும் சேர்ந்துமீதி 41.39 % பங்கு.
நான் சொல்ல வருவது -இந்த ஆளுக்கு பணத்திற்குஒன்றும் குறைவில்லை. உலகப்பணக்காரர்களின்பட்டியலில் இவரும் வருகிறார். ஆட்டம், பாட்டம்கொண்டாட்டங்களுக்கு ஒரு குறைச்சலும் இல்லை.
இவர் போட்ட ஆட்டங்களால் கம்பெனி திவால் ஆனால் - அதை மீட்க நாட்டுடைமை ஆக்கப்பட்டவங்கிகள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் ?
அவை அனைத்தும் இந்த நாட்டு மக்களின் பணம். நம் பணம்.இந்த ஆளின் நஷ்டத்தை ஈடு கட்டஅதைத் தூக்கி கொடுப்பதற்கு பிரதமருக்கோ, மற்றஅமைச்சர்களுக்கோ என்ன அதிகாரம் இருக்கிறது ?வங்கிகளில் இருப்பது இவர்கள் அப்பன் வீட்டுப் பணமா என்ன ?