பாஸ்வோர்ட் ஜாக்கிரதை



2011 ஆண்டின் உலகிலன் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள் - 25 Worst passwords of 2011
இணையத்தில் ஒரு செய்தியையோ அல்லது ஒரு கணக்கையோ பாதுகாக்க அவற்றுக்கென ஒரு பாஸ்வேர்ட் உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த பாஸ்வேர்ட்களை திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்த கணக்கையும் முடக்கி விடுகின்றன. இந்த செயலை தான் ஹாக்கிங் என அழைக்கிறோம். இந்த செயலினால் மிகப்பெரிய தளங்கள் கூட பாதிக்கப் படுவதை நாம் அறிவோம். ஆதலால் நம்முடைய பாஸ்வேர்ட் மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்கின்றோம். உங்கள் பாஸ்வேர்ட் Letters,numbers,special character ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும்.

கடினமான பாஸ்வேர்ட் உருவாக்க பல Password Generator மென்பொருட்கள் உள்ளன. பிரபல Password Management மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான Splash Data நிறுவனத்தினர் 2011 ஆண்டின் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்களை வெளியிட்டு உள்ளனர். கீழே உள்ள பட்டியலை பாருங்கள்
உலகில் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்:
1. password
2. 123456
3. 12345678
4. qwerty
5. abc123
6. monkey
7. 1234567
8. letmein
9. trustno1
10. ragon
11. baseball
12. 111111
13. iloveyou
14. master
15. sunshine
16. ashley
17. bailey
18. passwOrd
19. shadow
20. 123123
21. 654321
22. superman
23. qazwsx
24. michael
25. football
மேலே உள்ள இந்த 25 பாஸ்வேர்ட்கள் தான் உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பாஸ்வேர்ட்களை நீங்கள் வைத்தால் ஹாக்கர்கள் சுலபமாக உங்களின் பாஸ்வேர்டை அறிய முடியும். உங்களின் பாஸ்வேர்ட் எப்படி இருக்க கூடாது என பதிவை பார்த்து கொள்ளுங்கள்.
கடினமான பாஸ்வேர்ட் உருவாக்க பாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி உருவாக்க இந்த பதிவிற்கு செல்லுங்கள்.
இந்த தகவலை உங்களின் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களின் கணக்குகளை பாதுகாக்க உதவுங்கள்.


நன்றி - வந்தேமாதரம் இடுகை