ஏர்டெல் மற்றும் வோடாபோன் அலுவலகங்களில் சி பீ ஐ ....

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் சிபிஐ, வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் ரெய்ட் நடத்தி வருகிறது. மேலும், பாஜக ஆட்சியின் போது தொலைதொடர்பு அமைச்சராக இருந்த மறைந்த பிரமோத் மகாஜன் பதவி காலத்தின் போது அதிகாரிகளாக இருந்தவர்கள் மீதும் சிபிஐ புதிய குற்றசாட்டைப் பதிவு செய்துள்ளது.வீடுகளில் ரெய்ட் நடத்தப்பட்ட அதிகாரிகளின் பட்டியலில் முன்னாள் தொலைதொடர்பு செயலர் ஷ்யாம்லால் கோஷ் மற்றும் பிஎஸ்என்எல் முன்னாள் இயக்குனரும் அடங்குவர்.ஷ்யாம்லால் கோஷ், பிரமோத் மகாஜன் அமைச்சராக இருந்த போது தொலை தொடர்பு செயலராக பணிபுரிந்தார். அப்போது வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாகவும், மேலும் தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் சிபிஐ குற்றசாட்டு பதிவு செய்துள்ளது. இதற்கிடையே, வோடாபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் டில்லி, மும்பை அலுவலகங்களில் சிபிஐ இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகிறது.