வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Saturday, November 26, 2011
உழைப்போர் ஒரு புறம் ... வறுமை ஒருபுறம் ....


புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!…
, , .தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள 6 பேரும்……மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 399 பேரும்…..ஆசைதீரப் பேசிவிட்டுக் கட்டணத்தைச் செலுத்தாமல் அல்வா கொடுத்திருக்கிற தொலைபேசிக் கட்டணத் தொகை ரூ.7.30 கோடி!இந்த முன்னாள் எம்.பி.க்களில் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த எம். கிருஷ்ணசாமியின் (முன்னாள் காங்கிரஸ் தலைவர்தான்!) பங்கு ரூ.13.19 லட்சம். (தமிழ்க்குடி மகன்கள் பெருமையோடு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்).


இந்த விவரங்கள் எதையும் தானாக மத்திய அரசு

வெளி யிடவில்லை…… சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு இந்த விவரங்களை மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு தொலைபேசி இணைப்புகளை மத்திய அரசு வாடகை இல்லாமல் வழங்குகிறது. ஒன்று, அவரது தில்லி இல்லத்துக்கு. மற்றோர் அவரது சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு! இந்த இரண்டு தொலைபேசிகளிலும் ஆண்டுக்கு 50,000 அழைப்புகள் இலவசம்.

இதற்கும் மேலாக பேசப்படும் அழைப்புகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணத்தையும்கூட இவர்கள் செலுத்தாமல் அல்வா கொடுத்திருக்கிறார்கள் என்றால்….. இவர்களை எல்லாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?

அப்படி என்னதான் பேசினார்களோ தெரியவில்லை…… இவ்வளவு தொகைக்கு உண்டான அளவு மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசி இருந்தாலே, மக்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து இந்தியாவில் பாலும் தேனும் ஆறாக ஓடியிருக்குமே!

இதுமட்டுமல்ல…. முன்னாள் எம்.பி.க்கள் சிலர் தங்களுக்கு அரசு ஒதுக்கிய வீடுகளுக்கான வாடகையையும் செலுத்தியதில்லை. பதவிக்காலம் முடிந்த பிறகும் கூட வீட்டைக் காலி செய்யாத புண்ணியவாண்களும் உள்ளனர்.
தற்போதைய மக்களவைத் தலைவராக இருக்கிற மீரா குமார், தனது தந்தை ஜெகஜீவன்ராம் வீட்டில் வசித்து வந்ததற்காகச் செலுத்தவேண்டிய வாடகை ரூ.1.98 கோடி செய்தி வெளியாகியிருக்கிறது. இப்படி இன்னும் எத்தனையோஅரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் இப்படிப்பட்ட எம்.பி.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருக்க, இவர்களது தேர்தல் மனுக்களை ஏன் தேர்தல் ஆணையம் நிராகரிக்கக்கூடாது?
இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷனிலும், தற்போதைய உறுப்பினர்கள் என்றால் அவர்களது சம்பளத்திலும்….. இந்த நிலுவைத் தொகையை அரசு ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? சட்டத்தை உருவாக்குபவர்களே (லா மேக்கர்ஸ்) சட்டத்தை முறிப்பவர்களாக (லா பிரேக்கர்ஸ்) மாறுவதை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது?
இந்த யோக்கியதையில் இவர்களுக்குச் சம்பள உயர்வு வேறு.
சென்ற ஆகஸ்ட் மாதம்தான் இவர்களுடைய சம்பளம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அலுவலகச் செலவினத்துக்காக என மாதம் ரூ.25 ஆயிரமும், தொகுதிப் படி என ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுவதுடன், இந்த ரூ.50 ஆயிரத்துக்கும் வருமான வரி விலக்கும் வேறு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கிழித்த கிழிப்புக்கு…. பென்ஷன் தொகையும் ரூ.8,000-லிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
பாவம் இந்த பரம ஏழைகள் நடந்தா போவார்கள் என்பதற்காக….. கார் வாங்குவதற்காக என ரூ.4 லட்சம் வட்டியில்லாக் கடன் வேறு!.இவைதவிர….. நாடாளுமன்றத்துக்கு வரும் நாட்களுக்கு அந்தப் படி இந்தப் படி என்று என்னென்னமோ படிகள், இலவச ரயில் பயணம் என எல்லாக் கருமங்களையும் அனுபவிக்கிறார்கள்.
ஒரு நூறு ரூபா போன் பில் கட்டறதுக்கு ஒரு நாள் லேட் ஆகிட்டாலே, கனெக்ஷனைக் கட் பண்ணிட்டு அங்க வா இங்க வான்னு நம்மை மட்டும் அலைய விடறானுங்களே….. இந்தச் சட்டமெல்லாம் எங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு மட்டும்தானா?
கொதித்துப்போன இப்படிப்பட்ட மக்களின் மன உணர்வுதான்….. பவார் அடிவாங்கக் காரணம் என்பது…. புரியவேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!


நன்றி : உதய சூரியன் இடுகை