சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடு தேவை என்பதாகவும் அது மட்டுமல்லாமல் இப்படி மட்டும்தான் நாடு முன்னேற முடியும் என்கிற மாயையும் நம் மனதில் விதைக்கப் படுகிறது.
முதலாளித்துவத்தின் அடிநாதம் என்பது லாபம் என்பதும் அதனால் அது எத்தகைய செயலையும் செய்யும் என்பது கண்கூடு. மேற்கத்திய பொருளாதாரம் என்கிற அவர்களின் தவறான கொள்கைகள் பலவற்றை நாம் எந்த வித மறு பரிசீலனையும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்வது நமக்கு பெருத்த அவமானம். அவமானம் என்பதை விட நமது நாட்டை அடமானம் வைக்கிற செயல். முதலீடுகள் இங்கே வர அவைகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.
ஒவ்வொரு முறையும் அந்நிய முதலீடும், போட்டியும் [காம்பெடிஷன்] வந்தால் விலை குறையும் என்பதுதான் அவர்களது வாதம். அது எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது விலை குறைந்து கொண்டிருக்கிறதா என்பதுதான் கேள்வி. இன்னும் முழு அளவில் அந்நிய முதலீடுகள் இல்லாததுதான் இதற்கான காரணம் என்று நினைத்துக் கொண்டு இன்னும் முதலீட்டை எல்லாத் துறைகளிலும் அதிகப் படுத்தும் முட்டாள்தனத்தை விட வேறு கொடுமை ஒன்று இருக்க முடியாது. என்ன கொடுமை சார்?ஒரே ஒரு கேள்வி...



ஐரோப்பிய அமேரிக்கா நாடுகளில் எல்லாம் பொருளாதார வீழ்ச்சி - தங்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கூட மேம்படுத்த முடியாத இந்த நிறுவனங்களா இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் தூக்கி விடப் போகிறது.... இன்னமும் நம்புறீங்களே சார்? அங்கெல்லாம் எடுத்த லாபம் பத்தாதுன்னு இங்க வரத் துடிக்கிறான். அல்லது அங்கே இனிமே எடுப்பதற்கு ஒன்னுமில்லைன்னு இங்க வர்றான்.. நீங்க இன்னும் சிவப்புக் கம்பள விரிப்பைப் போட்டு வரவேற்றுக் கொள்ளுங்கள். இதைச் சொல்லுவதால் எங்களைப் பழம் பெருச்சாளிகள் என்று நினைத்தாலும் அதற்காக கவலைப் படப் போவதில்லை. நமது நாட்டை நினைத்துத் தான் கவலைப் பட வேண்டியிருக்கிறது.
நன்றி - வார்த்தைகளை விட கார்டூன் பேசுமல்லவா - நன்றி தினமணி மற்றும் மதி.