பிடிச்ச நம்பர் வேணுமா?
உடனே கிளம்புங்க
சிலர் நமக்கு போன் பண்ணும்போது,ஒ ரு முறை பார்க்கும்போதே அவர்களுடைய நம்பர் நச்சுன்னு நம்மோட மனசுக்குள்ள உட்கார்ந்துவிடும்.
அப்போது நமக்கும் மனசுக்குள்ள சின்னதா ஒரு அலையடிக்கும்…. நாமும் இப்படி ஒரு பேன்சி நம்பர் வாங்கினா என்னன்னு?
இப்போ அதுக்கு ஒரு சின்ன வாய்ப்பை பி.எஸ்.என்.எல். கொடுத்திருக்குது….. பயன்படுதான்னு பாருங்க.

‘பிடித்தமான செல்போன் எண்ணைத் தேர்வு செய்யுங்கள்” என்ற புதிய ஒரு திட்டத்தை பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம், கடந்த 16ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதன்படி, கொடுக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் எண்களில் இருந்து, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான எண்ணைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த வசதியைப் பெறுவதற்கு நீங்கள் செய்யவேண்டியது……
முதலில்- பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டத்தின் இணையதளத்திற்குச் (www.tamilnadu.bsnl.co.in) சென்று, அங்கு இருக்கும் “சூஸ் யுவர் மொபைல் நம்பர்ஸ்” என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
பிறகு- அங்கு கொடுக்கப்பட்டு உள்ள 96,515 செல்போன் எண்களில் இருந்து உங்களுக்குப் பிடித்தமான ஒரு நம்பரைத் தேர்வு செய்யுங்கள்.
தேர்வு செய்ததும், நீங்கள் ஏற்கனவே கொடுத்திருக்கும் செல்போன் எண்ணுக்கு, புதிய எண் தொடர்பான 7 இலக்க ரகசியக் குறியீட்டு எண் (பின் நம்பர்) எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.
தேர்வுசெய்துள்ள செல்போன் எண்ணை உறுதி செய்வதற்கு இந்தப் பின் நம்பரை மீண்டும் நீங்கள் குறிப்பிட வேண்டியது அவசியம்.
உறுதி செய்த பிறகு, அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். சர்வீஸ் செண்டருக்குச் சென்று இந்தப் பின் நம்பரைக் கொடுத்து, நீங்கள் தேர்வு செய்த எண்ணுக்கான சிம்கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.