மனம் திறந்த விவாதங்களே நியாயமான முடிவை வடித்தெடுக்க உதவும்

முடக்கப்படும் வாடிக்கையாளர் சேவை மையம்....!
விவாதிக்க மனம் வராது "மர்மமாய்" GM அலுவலக இடமாற்றம்...!
களைந்தெறிவோம்...! நிர்வாகத்தின் அலட்சியத்தை......!

தோழர்களே! தோழியர்களே!
நகரின் மையப்பகுதியில் வாடிக்கையாளர் சேவை மையம் செயல்பட வேண்டும் என்ற NFTE-இன் கோரிக்கை மாநில நிர்வாகத்தினால் ஏற்கப்பட்ட காரணத்தினாலேயே மட்டும் மெயின் தொலைபேசியகத்தில் மாற்றல் செய்யப்பட்ட CSC முடக்கப்படுகிறது. Grade-1, Grade-II வாய்ஜாலம் காட்டப்படுகிறது. முதன்மையான பகுதிக்கு "INCHARGE" நியமிக்கப்படாதது நிர்வாக மேதாவித்தனம். CSC-க்கு ஆட்கள் இடமாற்றல் அணுகுமுறையிலும். NFTE - நியாயமான காரணங்களை சொல்லி கேட்ட மாற்றல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.


GM அலுவலக இடமாற்றம் - ஓர் கூட்டுசிந்தனை மூலம் BSNL வாடிக்கையாளர் சிரமம் தவிர்க்கும் முறையில் மாற்றல் அமல்படுத்தலாம் என நிர்வாகத்திடம் மாவட்ட சங்கம் கடிதம் கொடுத்து எந்த பலனும் இல்லை. பேச்சுவார்த்தை அழைப்பிற்கும் தயங்குகிறார்கள்.


BSNL - இன் தற்போதைய நிதிநிலை காத்திடும் நோக்கத்தில் ஊழியர் குடியிருப்பை அலுவலகமாக மாற்றுவது மட்டுமே தீர்வாகாது !தொலைபேசி நிலைய தங்கும் விடுதிகளும் பயன்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையினாலேயே பேச்சுவார்த்தை தயக்கம் உருவாக்குகிறதா.....?


முடிவு கண்ட பின்னால் விவாதிப்பது நியாயமல்ல !
மனம் திறந்த விவாதங்களே நியாயமான முடிவை வடித்தெடுக்க உதவும்.
தெருவிறங்கி போராடுவதற்கு முன்னால்........
அனைவரும் கரம் கோர்த்த பேச்சுவார்த்தை தீர்வு
காணுமா மாவட்ட நிர்வாகம்!