வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Saturday, February 4, 2012

எவளவு அடிவாங்கினாலும் தாங்குராங்கப்பா விருது இவுங்களுக்கு தான் !தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆரம்பித்துவைத்த தொலைத்தொடர்பு கொள்கைகள் காரணமாகத்தான்
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. நாங்கள் அந்த கொள்கை பின்பற்ற மட்டுமே செய்தோம் என தெரிவித்துள்ளார் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல்.

முறைகேடாக 2ஜி உரிமம் பெற்றவர்களுக்கு 5 கோடி அபராதம், விதித்து உரிமத்தையும் ரத்துச் செய்த உச்ச நீதிமன்றின் தீர்ப்பை வரவேற்ற கபில் சிபில்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்காக அரசு காத்திருக்கிறது எனவும் 2ஜி ஊழலில் ப.சிதம்பரம் ஒருபோதும் சம்பந்தபடவில்லை. நிதி அமைச்சகம் இதில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை எனவும்

பிரதமரோ அப்போதைய நிதி அமைச்சரோ இந்த விஷயத்தில் நடந்ததற்கு எந்தவிதத்திலும் பொறுப்பாக முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படவில்லை என தெரிவித்த கபில் சிபல் பதவி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.