உலக புத்தக தினம்






உலகம் முழுவதும் ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தக தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் இது தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் பல இலக்கியவாதிகள் இந்த நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும்,புத்தக தினம் இந்த நாளில் கொண்டாடப்படுவதற்கான விசேஷ காரணமாக அமைகிறது.  காதலர் தினம் முதல் கல்லூரி தினம் வரை கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில் உலக புத்தக தினம் அறிவுலகவாதிகளின், படைப்பாளிகளின், புத்தக நேசர்களின் நாளாக அதற்குரிய சகல விதமான ஏற்பாடுகளுடன் நிகழ்வதற்கான தீவிரமான சூழலை நாம் எதிர்காலத்தில் உருவாக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
 
இன்று ஒரு நல்லபுத்தகம் வாங்குவது அல்லது நமது குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளிப்பது ... கடைபிடித்தால் அர்த்தமாகும் இந்நாள்....