தமிழ் எழுத்துலகின் பரிபூர்ண நிலா - புதுமைப்பித்தன்!
(இன்று - ஏப்.25 - தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அறியப்படும் தென்னகத்து மாப்பசான் புதுமைப்பித்தனின் பிறந்தநாள்.)

புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ்நாட்டை மடைமாற்றியவர். கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி, திசை திருப்பினான் என்றால், சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன். எள்ளல் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன். எதைத் தவறு எனப் பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி.
...
இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வைச் சொல்வதையே நினைத்தார். சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார். ஏழை பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை போராட்டத்தை, தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதை பெருமையாக கருதினார். முடிவு தருவது தன்னுடைய வேலை இல்லை என்பது அவரின் பாணி.

பெண்களின் அவல நிலையை காட்டுகிற இடங்களில் அவர் எழுதிய வரிகள் சுரீர் என்று தைக்கும். எடுத்துக்காட்டுக்கு, ''இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!” - முழுமையாகப் படிக்க http://bit.ly/ZQlR9C