பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்ட ஓவியம்



ஓர் ஓவியம் ஒரு புரட்சியில் மாபெரும் பங்குவகிக்க முடியுமா? முடியும் என நிரூபித்தது ழான் பால் மாரட்டின் மரணத்தை சித்தரிக்கும் ஓவியம்.

பிரெஞ்சு புரட்சிக்கான விதைகளாக பத்திரிகையின் எழுத்துக்களை மாற்றிய பிதாமகர் தான் இந்த மாரட்.

அவரை கத்தியால் சார்லோட் கோர்டே எனும் பெண் குத்திக்கொல்வதை சிதைக்கும் ஓவியம்தான் பிரெஞ்சு புரட்சி மாபெரும் அளவில் பரவுவதில் முக்கியமான பங்கு வகித்தது.

பல மக்கள் புரட்சி என்கிற பெயரில் கொல்லப்படுவதையும் மன்னர் கொல்லப்படுவதையும் விரும்பாத கோர்டே இச்செயலை செய்ததாக கூறப்பட்டாலும், இந்த ஓவியம் புரட்சியின் வீரியத்தை அதிகப்படுத்தவே செய்தது.

அதிலும் மாரட் ஒரு வகையான சரும நோயால் பாதிக்கப்பட்டு குளியல் அறையில் இருந்தே எப்பொழுதும் இயங்கிக்கொண்டு இருந்தார் அங்கே கொல்லப்பட்டு அவரின் நெஞ்சில் இருந்து குருதி வழிவது போன்ற இந்த ஓவியம் நம்மை என்னவோ செய்துவிடும்.

டேவிட்டின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்த ஓவியம் ஆயிரம் சங்கதிகளை சொல்லாமல் சொல்கிறது.

கத்தி அதிகாரம், மாரட் மாறாத பத்திரிகையாளன், ரத்தம் புரட்சிக்கான (சிந்தனை புரட்சி) நீர் என கொள்ளலாம் போல.