செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் ரோமிங் கட்டணத்தை குறைத்தது டிராய்

செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் ரோமிங் கட்டணத்தை குறைத்தது டிராய்

செல்போன் அழைப்புகள், எஸ்எம்எஸýக்கான ரோமிங் கட்டண உச்ச வரம்பை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) குறைத்துள்ளது.
அதன்படி தேசிய ரோமிங்கில் இருக்கும்போது செய்யப்படும் அழைப்புக்கான அதிகபட்ச ரோமிங் கட்டணம் ஒரு நிமிடத்துக்கு ரூ.1.40 என்பதில் இருந்தது, ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எஸ்டிடி அழைப்புகளுக்கான அதிகபட்ச ரோமிங் கட்டணம் ஒரு நிமிடத்துக்கு ரூ.2.40 என்பதில் இருந்தது ரூ.1.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரோமிங்கில் இருக்கும்போது செல்போனுக்கு வரும் அழைப்புக்கான ரோமிங் கட்டண அதிகபட்ச உச்சவரம்பு ஒரு நிமிடத்துக்கு ரூ.1.75 பைசா என்பதில் இருந்து, 75 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இலவச ரோமிங் வசதியைப் பெற அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இரு வகையான திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும். எனினும் தேசிய அளவில் இலவச ரோமிங் வழக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று டிராய் அறிவித்துள்ளது. தொலைத்
தொடர்பு நிறுவனங்களுக்கு தேசிய ரோமிங் சேவைக்கான செலவும் குறைந்துள்ளது என்று டிராய் தெரிவித்துள்ளது