வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, July 16, 2013

தமிழ் மாநிலச்சங்க அலுவலகத்திறப்புவிழா

மனம் நிறை 
மாநிலச்சங்க அலுவலகத்திறப்பு விழா 

தமிழ் மாநிலச்சங்க அலுவலகத்திறப்புவிழா 15/07/2013 அன்று 
நோன்பு நோற்கும் புனித ரமலான் மாதத்திலே.. 
எளிமையான நேர்மையான  
பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினத்திலே
சிறப்பு அழைப்பாளர் தோழர். ஜெயபால் அவர்களின் தலைமையிலே எளிமையாக இனிமையாக நடைபெற்றது.
முதன்மைப்பொதுமேலாளர்  முதல் உதவிப்பொதுமேலாளர் வரை அனைத்து  அதிகாரிகளும் 
அதிகாரிகள் சங்கங்கள் தொட்டு  ஊழியர் சங்கங்கள் வரை 
அனைத்து சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தோழர் ஆர்.கே., சிறப்புரையாற்ற, 
தோழர்.ஜெயராமனின் பங்கேற்பு மேலும் சிறப்பளித்தது.
சங்க அலுவலகம் NFTEஐ வலுவாக்கிட BSNLஐ வளமாக்கிட 
தனது பங்கை செலுத்திட வாழ்த்துகின்றோம் .
நன்றி ... காரைக்குடி இணையத்தளம்