இரண்டு செய்திகள் .

ஊதிய உயர்வை ஈடு செய்ய கூடுதல் நிதி தேவை: அருண் ஜேட்லி 

7-வது ஊதியக் குழு பரிந்துரையால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது. 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் கீழ் பயனடைவதால் அதிகரித்துள்ள ஊதிய உயர்வை ஈடுசெய்வதற்கு இந்த நிதியாண்டில் கூடுதலாக நிதி அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சம்பளம், படிகளை உயர்த்த வேண்டும்: நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கோரிக்கை

சம்பளம் மற்றும் இதர படிகளை உயர்த்த வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் நேற்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரத்தை சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராம் கோபால் வர்மா எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு எம்.பி.க்களின் சம்பளம், அரசில் உள்ள பி.ஏ.வின் (தனிப் பட்ட உதவியாளர்) சம்பளத்தை விட குறைந்து விட்டது. டெல்லி எம்எல்ஏ பெறும் சம்பளத்தை விட குறைவாகவே எம்.பி.க்கள் பெறு கின்றனர். மேலும் மகாராஷ்டிர எம்எல்ஏக்களின் சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகவும், தெலங்கானா எம்எல்ஏக்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியும் எம்.பி.க்கள் பெறுகின்றனர்.
எங்களை தேடி வரும் மக்களை உபசரிக்க வேண்டியுள்ளது. விலை வாசி உயர்ந்து வரும்போதிலும் எங்களின் சம்பளம் உயராமல் உள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைக்கு பின், மத்திய அரசில் அமைச்சரவை செயலாளர் பெறும் சம்பளத்தை விட அதிகமாக எம்.பி.க் களுக்கு தரவேண்டும். இவ்வாறு ராம் கோபால் வர்மா பேசினார்.
ரூ.2.8 லட்சம்
ஏழாவது ஊதியக்குழு பரிந் துரைக்கு பின், அமைச்சரவை செயலாளர் ரூ.2.5 லட்சம் மாத ஊதியமாக பெறுகிறார்.
யோகி ஆதித்யநாத் தலைமை யிலான நாடாளுமன்ற குழு, எம்.பி.க்கள் மாத சம்பளம் மற்றும் படிகளை இரு மடங்காக உயர்த்த அதாவது ரூ.2.8 லட்ச மாக நிர்ணயிக்க பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவையில் காங்கி ரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா பேசும் போது, “நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும் அரசு அமைதி காத்து வருவது இதுவே முதல்முறை. பிரதமரின் வெளிநாட்டுப் பயணங் களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் எம்.பி.க்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை” என்றார்.

.