வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, August 3, 2016

வேலூர் மாநாடு ...பயண கட்டுரை

வேலூர் மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ...என்றதும் ..
வாகனத்தை விட வேகமாக ஆதரவும்  வந்தது ...
ஆருடமும் வந்தது ...முடிவில் வென்றதென்னவோ வாகனம் தான் ...
முதுகுவலி தள்ளி வைத்த காரை தோழர் .பன்னீர் ..
தூரப்பார்வை தூக்கியெறிந்த தோழர் .முத்துகிருஷ்ணன் (NW )...
பின்னால் அமர்ந்து வர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க அவசியமில்லை ..
என மீண்டும்  இந்த உலகிற்க்கு உணர்த்திய தோழர் .பாஸ்கர் ..
கூகுளை விஞ்சும் சாலை வழி திட்டமிட்டு வரைபடம் தயார் செய்த ..
தோழர் .பாலமுருகன் ..
வாகன பழுதிற்கு கார்த்தி(எலெக் ) .. மன வலிமை தோழர் .சௌந்தர் ...CSC 
என தயார் பட ..
காரை தோழர் .இருதய சௌரி ராஜ் எடுத்து வந்தார் தன் காரை ..
தோழர்களின்  பொதி சுமக்க ...
தோழர் .இருதய சௌரிராஜ் கார் செலுத்திக்கொண்டே அவர் பேச்சை 
கேட்டு வரவும் ....
வாகன ஓட்டிகளுக்கு reliever ஆகவும்  .. காரைக்காலிலிருந்து ...
தோழர் ராஜகோபால் மற்றும் புண்ணியமூர்த்தி...பாஸ்கர் ...முருககுமார்..
தொடங்கியது ..பயணம் ..மழை சாரலோடு ... கொடியேந்தி ..
வழியெங்கும் .. புதிய GM  திரு .வினோத்  அவர்கள் பொறுப்பேற்ற பின்பு ..
அச்சடிக்கப்பட்ட ..வண்ண ..வண்ண  கலர் ...கலர் ...
 BSNL விளம்பர நோட்டீஸ் பொது மக்களிடம்  வழங்கியபடி  ... 
எந்நிலையிலும் NFTE  உயர்த்திடுவோம் ..
மாறி ..மாறி ...குழப்பம் செய்யாது ...
ஓடி ...ஓடி ..வாகனம் ஒட்டி ...ஒட்டி ...
NFTE மாநில மாநாடு சிறக்க செய்திட்ட ... 
NFTE மாநில சங்க காத்திடும் ...
குடந்தை மாவட்ட சங்க  பணி  என்றும் ...தொடரும் ...