கொக்கு ...நரி கதை நினைவில் நிறுத்தி படிக்கவும் ...


ஜியோவை வீழ்த்த உள்ளடி வேலை.. ஏர்டெல், வோடஃபோன், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.3050 கோடி அபராதம்
ஜியோவுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஐடியா, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, ரூ.3050 கோடி ரூபாய் அபராதம் விதிக்க, அரசுக்கு, தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது. ஃப்ரீ ஆஃபர்களால், ஜியோ சிம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதால் கடுப்பான ஐடியா, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள், ஜியோ நெட்வொர்க்கிலிருந்து வரும் இன்கம்மிங் அழைப்புகளை வேண்டுமென்றே பாதியில் துண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே ஜியோ வாடிக்கையாளர்கள் 'கால் ட்ராப்' பிரச்சினையை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த ஜியோ நிறுவனம், உண்மையை கண்டறிந்து, டிராயிடம் புகார் அளித்தது. புகாரை விசாரித்த ட்ராய், இம்மூன்று நிறுவனங்களும் வேண்டுமென்றே, ஜியோ சிம்மில் இருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்து, மேற்கண்டவாறு அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. தொலைதொடர்பு போட்டி அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் குறுக்கு வழியில், பிற நிறுவனங்களை முடக்க ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் முயன்றுள்ளது அம்பலமாகியுள்ளது.