வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, November 4, 2016

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.10,385 கோடி அபராதம்!



       (இந்த செய்திக்கு இது தான் பொருத்தமான படம் ...இதுவே பொருள் பொதிந்த படம் )
ஓ.என்.ஜி.சி-ன் எரிவாயு வயலில் இருந்து கசிந்த ஏரிவாயுவை, எடுத்து விற்பனை செய்ததற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.10,385 கோடி அபராதமாக விதிக்கப்பட்டு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா கோதாவரி படுகையில் உள்ள எரிவாயு வயலில் இருந்து, ரிலையன்ஸ் நிறுவனம், எரிவாயுவை எடுத்துவிட்டதாக ஓ.என்.ஜி.எஸ் புகார் தெரிவித்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ந்ஷா கமிட்டி விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிகை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்களின் விவரம் வருமாறு:
* ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான இயற்கை எரிவாயு வயலில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு வயலுக்கு 2009-ம் ஆண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2015-ம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதி வரையில் 1100 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு சென்றுள்ளது. இதில் 900 கோடி கன மீட்டர் எரிவாயுவை ரிலையன்ஸ் துரப்பணம் செய்து எடுத்து, விற்பனை செய்து விட்டது.
* ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எரிவாயு வயலில் இருந்து சென்ற இயற்கை எரிவாயுவை ரிலையன்ஸ் எடுத்தது அநியாயம்.
* ஓ.என்.ஜி.சி. எண்ணெய் வயலில் இருந்து இயற்கை எரிவாயு, ரிலையன்ஸ் எண்ணெய் வயலில் கசிந்ததற்கு அல்லது இடம் பெயர்ந்ததற்கு உரிய இழப்பீட்டை ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டும்.
* ஓ.என்.ஜி.சி.யின் இயற்கை எரிவாயுவை ரிலையன்ஸ் சுரண்டியதற்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசுக்கு தர வேண்டும். இந்த இழப்பீட்டை பெறுகிற உரிமையும், தகுதியும் ஓ.என்.ஜி.சி.க்கு இல்லை. ஏனெனில், எண்ணெய் எரிவயலுக்கான உரிமை ஓ.என்.ஜி.சி.க்கு கிடையாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. இயற்கை எரிவாயு வயலில் இருந்து இயற்கை எரிவாயுவை துரப்பணம் செய்து எடுத்ததற்காக ரிலையன்ஸ் நிறுவனம் 1.55 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.10 ஆயிரத்து 385 கோடி) இழப்பீடு தர வேண்டும் என கேட்டு மத்திய அரசின் எண்ணெய் அமைச்சகம், அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.