பிரதமர் ...படுத்தும் பாடு....( சாரி )...பணம் படுத்தும்பாடு


500...1000 ரூபா நோட்டு இனி செல்லாது ...
நடு நிசி சுதந்திர செய்திக்கு பிறகு ...
அந்தி மாலையில் நாட்டை கலவர படுத்திய செய்தி பரவியது ...
நிதானித்து ...உறுதிபடுத்தி ...முழுமை அறியும் முன்பு ...
நம்மை ...சுற்றியும் ...வலையில் படித்ததும் ...

என்னடா ... இது பைத்தியக்கார தனம் !!! என சொல்லியவாறு 
வாழைபழ  வியாபாரி ...பழத்தை கோபமாக புடுங்கி தந்தார் ...
மாப்ள ...உன்னிடம் வாங்கின 500 + 1000 கடனும் செல்லாதாம்ல ...
கலாய்த்த நண்பன் ...

கருப்பு பணம் ஒழிக்க ...பிரதமர் ஐடியாவாம் இது ...என்றவர்க்கு ...
நல்ல ...வேளை மக்கள் தொகையை குறைப்பேன் என 
தேர்தல் வாக்குறுதி ஏதும் தரல ...மோடி ...
இல்லைன்னா...இன்றிலிருந்து குடிநீர்க்கு பதில் ...
டெமாக்ரான் ன்னு ...சொல்லியிருப்பார் ...

இடைத்தேர்தல் தொகுதியிலும் 500...1000 செல்லாதுல்ல ..
திருப்பதி உண்டியலில் 500...1000 பணம் போட்டவங்களுக்கு ...
பாவமா ...புண்ணியமா ?
சுடுகாட்டில் இந்த பணம் செல்லும்னுனா ...எதுக்கு ?
பொணத்து மேல போட்டு எரிக்கவா ?

பேலியோகாரங்களுக்கு ...கவலையில்லை ...
நோட்டை வறுத்து சாப்பிடலாம் ...
என வித விதமா கோபம் ... கலந்த கேள்விகள் ...

பிரதமரின் தேர்தல் வித்தைகள் ...தான் இவை ...
ஆனால் ...ஒன்று ...
சுவிஸ் பேங்கில்  கைவைப்பேன் என்ற பிரதமர் ...
சுருக்கு பையில் கை  வைத்துள்ளார் ...
மொத்தத்தில் ...பொருளாதார நெருக்கடி நிலையே இது ...
பொறுத்திருந்து பார்ப்போம் ...வித்தைகளை !

பின் குறிப்பு :  தோழர்களுக்கு ....500...1000 ரூபாய் நோட்டு மட்டுமே செல்லாது ...அதனால் போனஸ் நன்கொடை ரூ .200 ஐ காலத்தே தந்திட கேட்டுக்கொள்கிறோம் !