NFTE 
மாவட்ட சங்கம் , கும்பகோணம் 

ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தில் ஒரு முன்னேற்றம்


தோழர்களே!...
           
             நேற்று அடிப்படை சம்பளம் ரூ120+ரூ130 =ரூ 250 ஒரு நாள் ஊதியமாக வழங்கப்பட்டது.

இன்று அரசு அதனை  ரூ350+ ரூ4.51 =  ரூ354.51 ஒரு நாள் ஊதியமாக வழங்க புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. ( அடிப்படை ஊதியம் +  அகவிலைப்படி)
           
            இது நிச்சயம் ஒரு முன்னேற்றம் தான் . ஆனால் , குறைந்தபட்ச ஒரு மாத ஊதியமாகழ் அரசே கூறிய ரூ 10.000/-விட குறைவு.  நம்முடைய மத்திய சங்கங்களின் கோரிக்கையான ரூ 18.000/-விட மிகக் குறைவு.
          ஆனாலும் , இந்த முன்னேற்றமும் AITUC முதலிய மத்திய சங்கங்கள்  செப்டம்பர் – 2015, செப்டம்பர்2016 ஆண்டுகளில்   நாடு முழுவதும் நடத்திய  வேலை நிறுத்த்தின் வெற்றியே இது...
          வேலை நிறுத்ததில் நாமும் பங்கு பெற்றோம் எனபது நமக்கு பெருமிதம்...  உத்தரவை அமுலாக்க வற்புறுத்துவோம்!...
            குறைந்தபட்ச சம்பளத்தை நியாயமாக நிர்ணயம் செய்ய, சம வேலைக்கு சம ஊதியம் பெற தொடர் இயக்கங்களைக் கட்டுவோம்! வெற்றி பெறுவோம்…
                                                                                                           தோழமையுடன்
                         NFTE 
                           மாவட்டச் சங்கம் 
                    கும்பகோணம்