NJCM-AGENDA

தேசிய கூட்டலோசனை குழுவில் NFTE சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் 

 TT கேடர் ஊழியர்களை JE பதவி உயர்வு ஆளெடுப்பில் தகுதி மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் வகையில் , JE கேடர் 50% வெளிப்புற ஆளெடுப்பில் 15 % TT க்கள் JE  பதவி உயர்வு பெரும்வகையில் ஆளெடுப்பு விதியில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் .

தேசிய வங்கிகள் போல நான்காவது சனி விடுமுறை வழங்கவேண்டும் .

NJCM /JCM  உறுப்பினர் நியமனத்தில் BSNL நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் தவிர்க்கப்படவேண்டும் . 

ஊதிய மாற்றத்திற்கான காலகேடு 1.1.2017 உடன் முடிவடைந்த நிலையில் .ஊதியக்குழு விரைவில் அமைக்க  DPE /DOT  வழிகாட்டுதல் விரைவாக வெளியிடல் வேண்டும் .சங்க பிரதிநிதிகள் கொண்ட ஊதிய பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படவேண்டும் .

டெபுடேஷன்  ஊழியர்களின் HRA  முரண்பாடு களையவேண்டும் .மெடிக்கல் அலவன்ஸ்  78.2 % ல் வழங்கப்படவேண்டும் .