வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, March 10, 2017

வேதசாட்சி ...தோழர் .அந்தோணிசாமிஉயிரே ...போனாலும் ...
ஏற்ற கொள்கையை எக்காலமும் உறுதியோடு பின்பற்றலின் ..
பெயரே ...வேதசாட்சி ....!!!

கிறிஸ்துவத்தில் வேத சாட்சி ...மரித்தலில் முடியும் ...!
இந்த வேதசாட்சி மீண்டும் வாழ்தலில் தொடங்குகிறது !!!

சாதீய பெயரிலான ...பொய்யான குற்றச்சாட்டில் ...
பணி நீக்கம் செய்யப்பட்டேன் ...
என்னை சொந்தக்காரன் என சொன்னால் ...
தன் வேலைக்கும் ஆபத்தென ...
உறவினர்கள் விலகிய கொடும் சூழலில் ...

நம்பிக்கையளித்து ...செயல்பட்டு ...
வாதிட்டு ...மீண்டும் பணி பெற்று தந்தது ...
NFTE  யே  ...என ...
கண்ணீரால் நன்றி சொன்னார் ...தோழர் .அந்தோணிசாமி ...
சேலம் மாநில செயற்குழுவில் ...

தோழர்கள் .பட்டாபி ,காமராஜ் ,நடராஜன் ,முரளி... யென 
தோழர்களின் முயற்சியை நினைவுகூர்ந்தார் ...

NFTE போற்றுதும் ... போற்றுதும் !!