தருமிக்கு .... யானை பரிசா ?

BSNL  நிதி நிலை சரியில்லை ...சரியில்லை ...
எனும் மந்திரம் நித்தம் சொல்லும் BSNL CO அலுவலகம் ...
சிக்கனமெனும் வார்த்தையை ... தன்னை நோக்கி ...
பயன்படுத்துவதில்லை !

ஓய்வுபெற்ற BSNL அதிகாரிகள் பரிந்துரையில் ...
ஹைதர் காலத்து ...வழக்கற்று  போன ...
உபகரணங்களை வாங்கிடும் BSNL CO அலுவலகம்...
அத்தோடு ...நில்லாது ..
ஹைதர் காலத்து உபகாரணத்திற்கு 
AMC  எனும் பெயரில் தண்ட செலவு வேறு ...

ஏழை புலவனுக்கு யானை பரிசு தந்த 
பரிதாப கதை போல ...
வழக்கொடிந்த உபகரணம் வாங்கி குவிக்கும் 
நிர்வாக பிற்போக்குத் தனம் அகற்ற ....

CMD  மற்றும் BSNL நிர்வாக இயக்குனர் முன்னிலையில் 
பேச்சு வார்த்தை கோரியுள்ளது ...
ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு !