4.1.19

கடவுள் நினைத்ததை ...மனிதன் பிரிக்காமல் இருக்கட்டும்
 

பென்சனின் செல்வன் ... நினைவு தின கூட்டம் ...
உணர்வாய் நினைவலைகளை சிலாகித்த ..
இளம் தலைமுறைக்கு தொழிற்சங்க பாடமான  கூட்டம் !
திரள் கூட்டம் ... அனைவரையும் வசீகரித்த கூட்டம் ...
NFTE மாவட்ட மாநாடு அரங்கம் முடிவு செய்த ..
மறு நிமிடமே ...அரங்கு வாடகை தொகையை ...
தன் பொறுப்பாக்கி கொண்டு  ... 
மாநாட்டு வரவேற்பு குழுவிற்கு உற்சாகம் தந்த 
ஒப்பந்த தொழிலாளி தோழன் .மோகன் !
புதிய தொலைபேசி இணைப்பு தேடலில் ...
சிறந்த செயல்பாட்டு விருது தோழன் .ராவணனுக்கு பாராட்டு!
பொது வேலை நிறுத்த விளக்கத்தில் பங்கேற்ற 
BSNLEU தோழர்கள் . மதி மற்றும் குருசாமி !
NFTE மாவட்ட மாநாட்டு நிதி பணியை துவக்கிய ...
கிளை ...மாவட்ட சங்க நிர்வாகிகள் !
அவையறிந்த ... சுவையான  பேச்சு ...
கேட்டார் பிணிக்கும் .... எனும் குறள் சாட்சியமான ஆழமான பேச்சு !
வார்த்தை பதினாயிரத்து ஒருவர் என அவ்வை சொன்ன ...
களங்கமில்லா ... உண்மை நிரம்பிய பேச்சு ... தந்தார் ...
தோழர் .மாரி ...
பேசும் முன் யோசி என்பதும் சொலவடை 
பேசி சென்ற பின் ...யோசிக்க வைத்த எளிமையான உரை !
குப்தர்களின் பொற்காலம் ... வரலாறு 
NFTE ன் பொற்காலம் குப்தா ...
பொது வேலை நிறுத்தத்திற்க்கான வலுவான காரணங்கள் !
ஓப்பந்த தொழிலாளி போராட்டம்  என ...
அனைத்தும் வகைப்படுத்தி விளக்கிய பேச்சு !
NFTCL சங்கத்தை TMTCLU உடன் 
இணையும் ...இணைய வேண்டும் ...
அதுவே ஒப்பந்த தொழிலாளியின் சுயமரியாதை பாதை என ..
தமிழகத்தில் முதலில் காரைக்குடி அப்பணியை செய்கிறது...
எனும் நல்லதொரு ஒளிவீச்சை ...
விதைத்து உற்சாகம் உறுதி தந்தார் ...
ஒற்றுமை இருக்கும் இடத்தில் கடவுள் உள்ளார் என்கிறது பைபிள் 
எனவே 
கடவுள் நினைத்ததை ...மனிதன் பிரிக்காமல் இருக்கட்டும் !
முன்னெடுப்போம் இணைப்பை தமிழ் தேசத்தில் !