2 G முறைகேடும்... நீதிமன்ற தீர்ப்பும் ...


ஸ்பெக்டரம் 2ஜி வழக்கில் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்பெக்டரம் 2ஜி வழக்கில், 11 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முறைகேடாக உரிமம்  பெற்றிருந்ததாகக் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள  தீர்பின் படி, 11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2008ம் ஆண்டிற்குப் பின் வழங்கப்பட்ட அனைத்து 2ஜி உரிமங்களும் ரத்துச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. 11 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இவ்வாறு முறைகேடாகப் பெற்றக் கொண்ட உரிமங்கள் 85 எனவும், இவ்வாறு தவறாக உரிமம் பெற்றுக் கொண்ட நிறுவனங்கள் தலா 5 கோடி ரூபாய்கள் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் அறிய வருகிறது.
ரத்துச் செய்யப்பட்டுள்ள உரிமங்கள் அடுத்து வரும் நான்கு மாத காலப்பகுதிக்குள், தொலைத் தொடர்பு ஆணையம் வகுக்கும் புதிய விதிமுறைகளின் கீழ் மீளவும் விற்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யவேண்டும் எனவும் அந்தத் தீர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.