பிஎஸ்என்எல்-லுக்கு ரூ.1500 கோடி மானியம் அளிக்கப் பரிந்துரை


பிஎஸ்என்எல்-லுக்கு ரூ.1500 கோடி மானியம் அளிக்கப் பரிந்துரை

கிராமப்புறங்களில் தரைவழித் தொலைபேசி இணைப்புகளை (லேண்ட்லைன்) வழங்கும் திட்டத்தை மேற்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடி மானியம் வழங்க தொலைத் தொடர்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மேற்கண்ட திட்டத்துக்காக ஆண்டொன்றுக்கு ரூ.2,580 கோடி மானியம் வழங்குமாறு பி.எஸ்.என்.எல். நிறுவனம் மத்திய அரசைக் கேட்டிருந்தது.
இது குறித்து அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவான தொலைத் தொடர்பு ஆணையம் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூடி விவாதித்தது. அப்போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2,750 கோடி மானியம் அளிப்பதற்கு ஒப்புதல் தரப்பட்டது. முதல் ஆண்டுக்கு ரூ.1,500 கோடியும் இரண்டாம் ஆண்டுக்கு ரூ.1,250 கோடியும் வழங்கலாம் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும், இது குறித்து தொலைத் தொடர்புத்துறை முடிவெடுக்கும் என்றும் தொலைத் தொடர்பு ஆணையத்தின் தலைவர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்தார்.