எரிதழல் ஏந்துவோம்...

லாபத்த காட்டுங்கள் என்றால் ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள் ... தங்கள் செயலற்ற தனம் மறைக்க ...இந்த உயர் அதிகாரிகள்.

ஆட தெரியாதவன் தெரு சரியில்லை என்று சொன்னது போல், BSNL உயர்த்திடுங்கள் என சொன்னால்...சொத்தை வாதத்தை செய்தியாக்கி பரபரப்பு கூட்டுகிறார்கள். ஒரு லட்சம் ஊழியர் உபரி என்கிறார்கள் ... விருப்ப ஒய்வு என்கிறார்கள் ...

48 சதம் ஊதியதிற்க்கே செலவாகிறதாம் ... அந்த 48 ல் தானப்பா உங்களுக்கும் வடித்து கொட்டியது...அந்த 48 ல் தானப்பா ...நீங்கள் ஜிம்கானா கிளப்பில்  ... BSNL வளர யோசித்த களைப்பு தீர BSNLகாசில் தண்ணியடிததது... அதே 48 ல் தானப்பா நீங்கள் BSNL வளர்க்கிறேன் ...  BSNL வளர்க்கிறேன் என விமானத்தில் பறந்தது .

50 வயதானால் திறன் குறைகிறதாம் ... அதனால் விருப்ப ஓய்வு அவசியமாம் ... இது நாள் வரை BSNL காசை அள்ளி அள்ளி பருகி உபதேசம் மட்டும் சொல்லி ...நிறுவனம் தளர்த்திய  CMD எல்லாம் என்ன 16 வயதா..?  இல்லை இனி வரப்போகும்  CMD எல்லாம் பதினாறு வயதினிலே வா ...?

உழுவ தெரியாது ... மரத்தடியில் ஓய்வெடுத்து விட்டு ... விதை நெல்லை விற்று காலம் ஓட்டலாம் என சொல்லுவோர்............
முக விலாசம் புறந்தள்ள தள்ள

 எரிதழல் ஏந்துவோம்...