உயர்நீதி மன்றம் இன்று தன் தீர்ப்பில் விவசாய நிலங்களில் கெயில் தன் குழாய்களைப் பதித்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருப்பதன் மூலம்
நீதிமன்றத்திலாவது தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்த இந்நாட்டின் குடிமக்களையும், உணவளிக்கும் தெய்வங்களான விவசாயிகளையும் தங்களுடைய நம்பிக்கை தவறோ என்று அச்சப்பட வைத்திருக்கிறது.
விவசாய நிலங்களில் தான் பதிப்போம் என்ற அரக்க எண்ணம் ஏன் இந்த கெயிலுக்கு?
சாலை ஓரங்களில் பதித்தால் என்ன கெட்டுவிட்ப் போகிறது?
தாயின் கருவறைகளுக்கு நிகரான விவசாய நிலங்களை அழிக்கத் துணியும் இவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது?
இந்த தேசத்தின் முதுகெலும்பாய் மதிக்கப்படும் விவசாயத்தை அழிக்க இந்த அரசின் நிறுவனங்களே இவ்வளவு மூர்க்கமாய் இறங்குவது தன் முதுகெலும்பைத் தானே உடைத்துக் கொள்ளும் செயல் ஆகாதா?
பசித்த வயிறுகளுக்கு உணவளித்ததைத் தவிர வேறு என்ன செய்து விட்டார்கள் வாழும் தெய்வங்களான இந்த விவசாயிகள்?
அவர்களுக்கு ஏன் இவ்வளவு துன்பங்கள்?
விடையில்லாக் கேள்விகள் மட்டுமே பெருகி நிற்கின்றன இந்தத் தாய்த்திரு நாட்டினிலே!!