ஓட்டுரிமை - நமது கடமை
உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு
உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு
முதுகெலும்பாக விளங்கும் இந்திய தேர்தல்
ஆணையம், ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இது 1950 ஜன., 25ல்
உருவாக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில்
2011 முதல், ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஓட்டுப்பதிவை அதிகப்படுத்தி, ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை
ஓட்டுப்பதிவை அதிகப்படுத்தி, ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை
உணர்த்துவது இதன் நோக்கம். தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்குப்
ஏற்ப, ஓட்டளிக்க மின்னணு எந்திரம், அனைவருக்கும் புகைப்பட அடையாள
அட்டை, விரைவாக தேர்தல் முடிவுகள் என புதுமைகளை புகுத்தி வருகிறது.
தற்போது நாட்டில் பணத்தை கொடுத்து வாக்குகளை சேகரிக்கும் புதிய
தற்போது நாட்டில் பணத்தை கொடுத்து வாக்குகளை சேகரிக்கும் புதிய
வழியை அரசியல் கட்சிகள் புகுத்தியுள்ளன. இது நாட்டை விற்பதற்கு சமம்
என்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம்
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனவே அனைவரும் ஜனநாயக
கடமையை கடமை தவறாமலும், செம்மையாகவும் நிறைவேற்றுவோம்.