நண்பர்களே!!!
உண்மையான விளம்பரம் என்ன ?
ஒரு பொருளை வாங்கி உபயோகித்து பிறகு அதன் சிறப்பை பிறரிடம் பகிர்ந்து கொள்வது தான்.
அப்படி பகிர்ந்துகொள்ளும் போது சொல்பவர் கேட்பவர் என இருவரும் பயன் பெறுவர்.
சமீபத்தில் nammabooks.com வலையதலதிலிருந்து கல்கியின் "பொன்னியின் செல்வன்" ஒலி புத்தகத்தை வாங்கினேன். (Rs 600/- மட்டும்). இந்த ஒலி புத்தகத்தை கேட்டக ஆரம்பித்து சிறிது நேரத்தில் 1000 வருடங்கள் பின்னோக்கி பயணித்தேன். ஒரு வாரத்துக்கும் மேல் சோழ சாம்ராஜ்யத்தில் உலாவ உதவிய "Time Machine" இந்த ஒலி புத்தகம்.
காதல், நட்பு, வீரம், சூழ்ச்சி, தந்திரம், தியாகம் என அனைத்தும் கலந்த கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை ஒலி வடிவில் மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளார் திரு பாம்பே கண்ணன் அவர்கள்.
இது போன்ற நல்ல படைப்புகளைப்பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது ஒரு வித குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சிறந்த படைப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.
நீங்களும் இந்த ஒலி புத்தகத்தை வாங்கி பயன் பெறுங்கள் என கேட்டுகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"To get the audio cd online:http://www.nammabooks.com/Ponniyin-Selvan-Audio-Book
நன்றி
ஹரி கணேஷ்.
face book ல் படித்தது