JTO ஆளெடுப்பு விதிகள் 2014

2001ல்  உருவாக்கப்பட்ட JTO  ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிகளின்படி 

  • JTO பதவி மாநில அளவிலான பதவியாக இருக்கும். 
  • CGM  பதவி அமர்த்தும் அதிகாரியாக இருப்பார்.
  • காலியிடங்களில் 50 சதம்  வெளியாட்கள் மூலமாகவும்,  50 சதம் இலாக்கா ஊழியர்கள் மூலமாகவும் நிரப்பப்படும்.
  • 50 சத இலாக்கா காலியிடங்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாகவும், 13600-25420 (TTA) சம்பள விகிதத்தில் 7ஆண்டுசேவைமுடித்து BE/DIPLOMA/B.Sc(MATHS/PHYSICS/CS/ELECTRONICS)  கல்வித்தகுதி உள்ளவர்கள் மூலமாகவும் போட்டித்தேர்வின் மூலம் நிரப்படும்.
  • தற்போது SCREENING  தேர்வு எழுதி OFFICIATING செய்யும் தோழர்கள் JTOவாக நிரந்தரம் செய்யப்பட்ட பின்னர் ஒய்வு,இறப்பு போன்றவற்றால் உருவாகும் JTO காலியிடங்கள் இலாக்கா போட்டித்தேர்விற்கு மாற்றப்படும்.
  • இலாக்கா  ஊழியர்கள் 55 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்