இந்தியாவை ரகசியமாக உளவு பார்க்கும் சீனா!! உதவி செய்த ஹவாய் நிறுவனம் சிக்கியது




பிஎஸ்என்எல் நெட்வொர்க்குகளை பாதிப்புக்குள்ளாக்கியதாக சீனாவின் தொலைத்தொடர்புக் கருவிகள் தயாரிப்பாளரான ஹவாய் நிறுவனம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு இதன் மீதான விசாரனையை துவங்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. பாரத் சன்சார் நிகம் லிமிடெட் நிறுவன தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளை, சீன நிறுவனமான ஹவாய் சட்டவிரோதமாக அத்துமீறிப் பயன்படுத்திய சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்த விசாரனையை மேற்கொள்ள அரசு அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குழுவை நியமித்துள்ளது என தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணையமைச்சர் கில்லி கிருபாராணி மக்களவையில் தெரிவித்தார். ஹவாய் நிறுவன பொறியாளர்களின் இந்த அத்துமீறலால் ஆந்திர மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள மொபைல் டவர்கள் பாதிப்புக்குள்ளானதாக சில மாதங்களுக்கு முன் புகார்கள் வந்துள்ளன. அமைச்சரின் எழுத்து மூலமான பதிலில் இது குறித்த விவரங்கள் எதுவும் தரப்படவில்லை.

Read more at: http://tamil.goodreturns.in/news/2014/02/10/huawei-allegedly-hacked-bsnl-network-govt-002105.html