பி.எஸ்.என்.எல். ரோமிங் கட்டணம் 40% குறைப்பு

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது தேசிய ரோமிங் கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்தது.
புதிய கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
ரோமிங்கில் அழைப்புகளைப் பெறும் கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர, எஸ்.டி.டி. கட்டணம் 23 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அழைப்புகளுக்கான கட்டணம் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர், தேசிய குறுஞ்செய்திகளுக்கான (எஸ்.எம்.எஸ்.) கட்டணங்கள் 75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் சேவைகளில், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலான அழைப்புகளை இலவசமாக அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. மே 1-ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, ரோமிங் உள்ளிட்ட கட்டணங்கள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.