NFTE சங்கம் ...பிரதமருக்கு கடிதம் ....


Image result for writing a letter images
மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு ...
1.1.2017 முதல் ஊழியர்களுக்கான புதிய ஊதியம் வழங்கப்படவேண்டும் .பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வை ஊழியர்கள் எதிர்பாத்து இருக்கிறார்கள் .மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு பெற்ற சூழலில் .
இது குறித்த கவலையுடன் DPE வழிகாட்டுதல் கோரி நிறைய கோரிக்கை மனு தந்துள்ளோம் .ஊதிய உயர்வுக்கான காலங்கள் கடந்த சூழலில் DPE  இதை ஒரு பொருட்டாகவே கருதாமல் ஊழியரை ஏமாற்றும் சூழலில் தங்கள் தலையீட்டை கோருகிறோம் .

இந்த சூழலில் இரண்டாவது அங்கீகார சங்கமான NFTE சங்கம் ,BSNL நிறுவனத்திடம் ஊதிய உயர்வுக்கு வலியுறுத்திய சூழலில் ...BSNL நிறுவனம் DPE வழிகாட்டுதல் இல்லாமல் தன்னால் ஊதிய உயர்வு குறித்து ஏதும் செய்ய இயலாது என சொல்கிறது .

எனவே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு DPE வழி காட்டலையும் ,அதிகாரிகளின் ஊதிய உயர்வுக்கு கேபினட் ஒப்புதலையும் வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் .