புதிய LANDLINE மற்றும் BROAD BAND இணைப்பிற்கு ...
ஊக்கத்தொகை என நிர்வாகம் சொன்னது
தெரு தெருவாய் ...அலைந்து பிடித்தான் தொழிலாளி ...
ஆனால் ...அந்த இன்சென்டிவ் வழங்க மாதா மாதம்
சங்கம் சங்கு வைத்து ஊதவேண்டும் ...
இன்சென்டிவ் வழங்க ஆயிரத்தெட்டு கேள்வியோடு ...
கோப்பு தூங்கி வடியும் ... நகராது...
அதுவும் ERP ல் PAYBILL முடிக்கும் தேதியில் தான் ...
இன்சென்டிவ் குறித்து சந்தேகம் வந்து ...
கேள்வி மேல் கேள்வி எழுப்பும் ...
பொது மேலாளர் தீர்ப்புக்கு பின் நாலடி நகரும் ...
பின் தீரும் ....
இந்த கொடுமை எப்படி தெரிந்ததோ ...நிர்வாகத்திற்கு ?
தற்பொழுது இன்சென்டிவ் வழங்குதல் குறித்து
புது வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது ...
SDCA அளவில் அதிகம் இணைப்பு தரும்
முதல் மூன்று நபருக்கு சான்றிதழ் வழங்கவும் ...
மாவட்ட அளவில் மாதா மாதம் ...
சிறந்த செயல்பாட்டாளர்க்கு விருது வழங்கி கவுரவிக்கவும்
உத்தரவு வெளியாகியுள்ளது ...
காலத்தே ...குறை உணர்ந்து ..
நிறை செய்த நிர்வாகத்திற்கு நன்றி ...
எட்டு திக்கும் ...தேடுவோம் ...இணைப்புகள் ...
கொணர்ந்து சேர்ப்போம் ...சிறக்க !