காரைக்கால் சிம் (கும்ப ) மேளா





காரை மாங்கனி திருவிழாவில் ...NFTE சார்பில் சிம் மேளா நடைபெற்றது ..
இரண்டாம் ஆண்டாக நடைபெற்றது ...
மேளாவிற்கு ஒரு வாரம் முன்பே ...
பதாகை ...சுற்றறிக்கை ...தொலைக்காட்சி ..
விளம்பரம் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதால் ...
9 மணி முதலே ..."காலா" திரைப்பட பரபரப்பில் ...சூழ்ந்த கூட்டம் ...
காரைக்கால் NFTE கிளை சங்கம் சார்பில் ...
BSNL  திட்டங்கள் பொறித்த விசிறி  தயார்செய்யப்பட்டிருந்தது ...
பொதுமேலாளர் மண்ணின் மரபோடு வரவேற்கப்பட்டார் ...
சட்டப்பேரவை உறுப்பினர் திருமிகு .அசானா வருகை தந்தார் ...
விசிறியை சட்டப்பேரவை உறுப்பினருக்கு PGM வழங்கினார் ...
சட்டப்பேரவை உறுப்பினர் ...
PGM  மிடம் மக்களின் கோரிக்கை மனுவை ..வழங்கினார் ...
சென்ற மாங்கனி மேளாவில் ...சிறப்பாய் பணியாற்றிய ...
தோழர் ரத்தினவேல்  JE ஐ ..வாழ்த்த வேண்டும் எனும் 
நம் கோரிக்கையேற்று ...கூட்டத்தில் நடந்தே வந்து ...
தோழர்களை உற்சாகப்படுத்தினார் ...PGM ...
மேளாவில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ...வலிகள் தந்தாலும் ...
தடங்கல்கள் அனுபவமாக எடுத்துக்கொண்டு ...
வருங்காலம் இந்த தவறுகள் தடுக்கப்படும் ... 
 என சமரச செய்துகொண்டோம் ...நிஜமாகட்டும் !
முதல் நாள் ...ஜூலை 8 .மேளாவில் ...
400 சிம் விற்பனை ... 4 LAND LINE இணைப்பு ... பதிவானது ...
400 சிம்மும் அன்றே ACTIVATE செய்யப்பட்டது ...
தொழில்நுட்ப கோளாறு தவிர்த்திருந்தால் ...
400 ...650 ஆகி இருக்கும் ...
குடந்தை மாவட்டத்தில் இரண்டு கோடி நஷ்டம் 
குறிப்பெடுத்து மட்டும் வைத்துகொள்ளாது ...
 NFTE  வினை புரிய வேண்டும் ... எனும் எண்ணமே ...
மேளாக்களின் பின்புலம் ...
மொத்தத்தில் இரண்டு நாள் மேளாவில் ...
900 ... தொள்ளாயிரம் ..
சிம் விற்பனை செய்யப்பட்டது ...
வினை புரிந்த ...செயலாற்றிய ...கரம்கோர்த்த ...
அதிகாரிகள் ...ஊழியர்கள் ...ஒப்பந்த ஊழியர்கள் ...
அனைவருக்கும் நன்றி ..நன்றி ...
தோழமையுடன் ....M .விஜய் 

(இரண்டாம் ...நாள் அறிக்கை தொடரும் )